தீபாவளி பரிசு ஷாப்பிங்: பெண்கள் நடத்தும் பிசினஸ்களில் இருந்து ஆர்டர் செய்யுங்கள்!

இந்த தீபாவளிக்கு உங்கள் அன்பானவர்களுக்கு பெண்களே நடத்தும் பிசினஸ்களில் இருந்து ஆன்லைனில் அன்பளிப்புகளை வாங்கி பரிசளியுங்கள்!

பெண்களே நடத்தும் பிசினஸ்களில் இருந்து ஆன்லைனில் அன்பளிப்புகளை வாங்கி அளிப்பதன் மூலம், இந்த தீபாவளியை மேலும் இனிக்கச் செய்யுங்கள்!

இந்த தீபாவளிக்கு, இந்த கோவிட் -19 காலத்தில், வீட்டில் இருந்தபடியே உறவுகளுடன் உங்கள் அன்பை பகிரவும், வளரும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் இதோ ஒரு அருமையான வாய்ப்பு!

பெண்களே முன்னின்று நடத்தும் ‘women-run’ பிசினஸ் சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறோம். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்புடன் பரிசளிக்க, வேண்டிய அன்பளிப்பை ஆர்டர் செய்து உங்களுக்கு அன்பானவர்களை மகிழ்வித்து மகிழுங்கள்!

பேக்கரி உணவு வகைகள்

Sweet Delish (சென்னை)
வகையினம்: கேக், குக்கீஸ், டார்ட்
விலை: ₹ 170 முதல்
தீபாவளி பண்டிகையை பிரத்யேகமாக ‘மாடர்ன் ட்விஸ்ட்’டோடு, குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக், குக்கீஸ், டார்ட் வகை உணவுகளுடன் கொண்டாடவும் பரிசளிக்கவும், சென்னையை சேர்ந்த சந்தியா அருண் ஸ்ரீகாந்தின் கைப்பக்குவத்தில் உருவான அருமையான ஸ்வீட் வகைகளை ஸ்வீட் டெலிஷ்-இல் இருந்து ஆன்லைனில் வாங்கி மகிழுங்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு: ஸ்வீட் டெலிஷ் ஆர்டர்கள் சென்னையில் மட்டுமே டெலிவெரி செய்யப்படும்.

உயர்தர கைவினை காகித கிராஃப்ட் பொருட்கள்

Creations for Every Occasion (சென்னை)
வகையினம்: பிரத்யேக வாழ்த்து அட்டைகள், ஆல்பம், அலங்காரப் பெட்டிகள், மற்றும் பல
விலை: ₹30 – ₹6000
உங்கள் அன்பை பிரத்யேகமாக வெளிப்படுத்த உங்களுக்காவே தனிப்பட்ட முறையில், உங்கள் விருப்பத்திற்கேற்ப பரிசுப்பொருட்களை கைப்பட தயாரித்து தருகிறார், சென்னையை சேர்ந்த அனுஷா வம்சி. இந்த அழகிய பரிசுப்பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும். அனைத்து ஆர்டர்களும் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும்.

ஃப்ரேம் ஒர்க்ஸ் மற்றும் லீஃப் ஆர்ட் பொருட்கள்

Happiee.arts (சேலம்)
வகையினம்: கைவினை வீட்டு அழகுப் பொருட்கள்
விலை: ₹500 – ₹1000
நீங்கள் சேலம் நகர வாசிகளுக்கு பரிசளிக்க விரும்பினால் , மோனிகா நடத்தும் இந்த கைவினை வீட்டு அழகுப் பொருட்கள் (Handmade home decor) விற்பனையகத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய பரிசுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு: ஹாப்பி ஆர்ட்ஸ் ஆர்டர்கள் சேலம் நகரத்தில் மட்டுமே டெலிவெரி செய்யப்படும்.

பசுமை தீபாவளி பரிசுப் பொருட்கள்

Green Panther (பெங்களூரு)
வகையினம்: வீட்டில் செடி வளர்க்க தேவையானவை
விலை: ₹100 – ₹400
கிரீன் பாந்தர்-இன் நிறுவனரான ஸ்ருதி ஜா, குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் மற்றும் செடிவளர்ப்பு குறித்த ஆர்வத்தையும் புரிதலையும் உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பக் கூடிய இந்த பயனுள்ள கிரீன் பாந்தர் செடி வளர்ப்பு ‘கிட்’களை பரிசளிக்க இங்கே க்ளிக் செய்யவும். அனைத்து ஆர்டர்களும் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும்.

பஞ்சகவ்ய அகல் விளக்குகள்

CocoWing (பெங்களூரு)
வகையினம்: கைவினை அகல் விளக்குகள்
விலை: ஒரு விளக்கு ₹ 12 மட்டுமே
மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் கோகோ விங் நிறுவனத்தை நடத்தி வரும் பெங்களூருவை சேர்ந்த வந்திதா திவாரி, இந்த தீபாவளிக்கு பஞ்சகவ்யத்தால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை தனது குழுவுடன் இணைந்து தயாரித்து தருகிறார். தீபாவளிக்கு மிக உகந்த இந்த பரிசுப்பொருட்களை ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். அனைத்து ஆர்டர்களும் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும்.

Never miss real stories from India's women.

Register Now

இந்த தீபாவளியை மேலும் இனிக்கச் செய்யுங்கள்!

உங்கள் அன்பானவர்கள் இருப்பது உள்ளூரோ வெளியூரோ; ஏன் உங்கள் வீட்டிலேயே உடன் இருப்பவரோ, அவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்புடன் தீபாவளி வாழ்த்துச் சொல்லி, இந்த தீபாவளியை அவர்களுக்கும், உங்களுக்கும், சாதிக்கத் துடிக்கும் பெண் தொழில் முனைவோருக்கும் மேலும் இனிக்கச் செய்யுங்கள்!

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 53,288 Views
All Categories