சென்னையின் வெற்றிகரமான 5 தொழில் முனைவர்கள், சாதனை பெண்கள்

கடந்த சில வருடங்களாக, நாம் சென்னையின் பல பெண் தொழில் முனைவோர்களை காண்கிறோம். புதுத்தளங்களில், தங்களுக்கான கோட்டையை கட்டிவரும் இவர்கள் உடல் நலம், கட்டிடங்கள், தளவாடங்கள் என பலவகைகளில் எல்லா புலங்களில் தன் முத்திரையை பதித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக, நாம் சென்னையின் பல பெண் தொழில் முனைவர்களை காண்கிறோம்.  புதுத்தளங்களில், தங்களுக்கான கோட்டையை கட்டிவரும் இவர்கள் உடல் நலம், கட்டிடங்கள், தளவாடங்கள் என பலவகைகளில்  எல்லா  புலங்களில் தன் முத்திரையை பதித்து வருகின்றனர். 

மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா

உண்மையை சொல்லப்போனால் இந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான பெண் தொழில் முனைவர்கள் தமிழ்நாட்டில் தான்.

இந்த பெண் தொழில் முனைவர்களின் பயணங்கள் மிகவும் சுவாரஸ்யமானது. இதோ சென்னையின் 5 வெற்றி பெண் தொழில் முனைவர்களின் உண்மையில் ஆர்வமுட்டும் கதைகள். 

Read in English: 5 Women Entrepreneurs in Chennai

ஜி. ஸ்ரீ வித்யா

சென்னையின், ஒரு குடிசைப்பகுதியின் வாடகை குடியிருப்பில் இருந்து , 22 கோடி வருமானம், 4000  பணியாளர்களுடன் ரவீந்திரா , சர்வீஸ் பிரைவேட்  லிமிடட்-இன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உயர்ந்திருக்கும் ஜி ஸ்ரீ வித்யா, சென்னை மற்றும் இந்தியாவின் முதன்மையான தொழில்முனைவோர்களில் ஒருவர். இவர் அகில இந்திய அளவில் பெரு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையை செய்துவருகிறார்.

இளம் வயதிலேயே விவாகரத்தான இவர் தன் மகளைத் தனியாய் (ஒற்றை பெற்றோராக)   வளர்த்து வருகிறார். நிறைய வேலைகளுக்கு சென்ற இவர் இந்த செக்யூரிட்டி மற்றும் பாதுகாப்பு சேவையில் இறங்கும் முன்பு இந்திரா காந்தி திறந்த நிலைப்பல்கலைக் கழகத்தில் தன் முதுகலை வணிக நிர்வாகம் (MBA)  முடித்தார்.

ஸ்ரீவித்யாவின் வர்த்தக கூட்டாளியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய அவரது  நண்பர் ரவீந்திர பத்மநாபன் அவரால் புதிதாக துவக்கப்பட்ட வீடுகளை தூய்மை செய்யும் பணி சார்ந்த ஆன்கோல் கிளீனிங் எனும் கம்பெனியில்  ஸ்ரீ க்கு வேலை வாய்ப்பு தந்தார். 

ஸ்ரீவித்யா தன் தொலைநோக்கு பார்வை மற்றும் நுண்ணறிவால் , அந்த நிறுவனத்தை பெரு நிறுவனங்களுக்கான பராமரிப்பு சேவை நிறுவனமாகவும் பின்பு அதையே பாதுகாப்பு சேவைகள் தரும் நிறுவனமாக தரம் உயர்த்தினார். 2001 இல் அவருடைய வழிகாட்டியின் மறைவிற்குபின் 2003 இல் அந்நிறுவனத்தை தானே வாங்கியதுடன் அதற்கு ரவீந்திரா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் எனும் பெயரிடவும் செய்தார்.

பாதுகாப்பு சார்ந்த சேவைகள் ஆண்களின் கோட்டையாக காணப்பட்ட நேரத்தில் , ஸ்ரீ ஒரு பெண்ணாய் அந்நிறுவனத்தை நடத்துவது சவாலானதாகவே  இருந்தது. இரவு நேரங்களில் மிளகு தூள் அடங்கிய ஒரு தெளிப்பானை தன் பாதுகாப்புக்காக எடுத்துக்கொண்டு காவலர்கள் உரிய இடங்களில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க ஸ்ரீ சென்றதுண்டு.

தற்போது அவரது நிறுவனம் ஸ்ரீ க்கு பெருமை சேர்க்கும் வகையில் 15 சதவீத பெண் தொழிலாளர்களுடன் L&T குழுமம் போன்ற புகழ்பெற்ற வாடிக்கையாளர்களுடன் இயங்கிவருகிறது. மேலும் தற்போது தொழில் விரிவாக்கப்பட்டு வசதி மேலாண்மை ((பராமரிப்பு, மின் மற்றும் குழாய்கள் பழுது நீக்கங்கள்) பாதுகாப்பு பிரிவு, தற்காலிக பணியாளர்கள் மற்றும் வர்த்தக பிரிவின் மூலம் தூய்மை செய்யும் வேதிப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் நிறுவனமாகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மது சரண்

சென்னையில் பெண் தொழில் முனைவராக விளங்கும் மது சரண் , ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 2016 ஆம் ஆண்டில் பெண் தொழில் முனைவர் நாள் அன்று தொழில் முனைவோர் சார்பில் இந்தியாவின்  உலகப் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டபின் இந்தியாவின் பெண் தொழில் முனைவோர்களின் ஒட்டு  மொத்த குரலாய் மாறியுள்ளார். 

STC TECHNOLOGIES எனும் மென்பொருள் சோதிப்பு நிறுவனம் மற்றும் ABC Clinic, அழகு சாதன கிளினிக் மற்றும் மையங்களை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சொந்தமாக நடத்தி வருகிறார். பெண்களுக்கு அதிகாரம் தரும்நோக்கில், இவர் நடத்தும் ரிவர் எனும் ஒரு அமைப்பு சாரா நிறுவனம் அதிக பெண் தொழில்முனைவோர் தைரியமாக தங்கள் முயற்சியில் இறங்க ஊக்குவித்து வருகிறது. 

இந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மாமிஸ் ஹவுஸ் ஆஃப் காபி ஆன் வீல்ஸ் (MHC) பெண்களின் ஆற்றலை தொழில் நிலையில் மேம்படுத்தி, வாழ்க்கைக்கு தேவையான பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமன்றி காபி பிரியர்களுக்கு புத்தம் புதிய காபியையும் தயாரித்து தருகிறது.

அர்ச்சனா ஸ்டாலின்

மகாத்மாவின் சுய சார்பான கிராமங்களை ஏற்படுத்தும் இலட்சியத்தில், பொறியியல் பட்டதாரிகளின் குழுவால்  உருவாக்கப்பட்டதுதான் அர்ச்சனா ஸ்டாலின் அவர்களின் மை ஹார்வஸ்ட் நிறுவன பண்ணை..

பண்ணை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் தண்ணீர் மறுதேக்கம், மரம் நடுதல் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்பில் உதவுவது ஆகும். ஆயினும் பின்னர் கிராமத்தின் முதுகெலும்பான பொருளாதார மேம்பாட்டைத் தரும் விவசாயத்தை மேம்படுத்தாமல் கிராம சுயசார்பு என்பது சாத்தியமல்ல என உணர்ந்தார்.

விவசாயத்தினை மேற்கோள்ள வேண்டிய அவசியம் உணர்ந்த அதே வேளையில் அர்ச்சனா ஸ்டாலின் நம் தாய் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சிறந்ததல்ல என்பதை உணர்ந்தார். 

சில விவசாயிகள் உதவியுடன் பழமையான விவசாய முறைகளைக் கையாண்டு, அதிக உழைப்பின் மூலம் வேதிப்பொருட்களற்ற விவசாயத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்.

இதன்மூலம் நம்மைப்போன்ற நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் இயற்கை உணவுத்தேவைகளையும் அதற்கான தீர்வையும் ஒருங்கே தரும் வகையில் உருவாக்கப்பட்டதே மை ஹார்வெஸ்ட் நிறுவனம்.  

அர்ச்சனா ஸ்டாலினின் இந்த சமூகப் பண்ணையின் மூலம், பண்ணைகள் 30 குடும்பங்களுக்கு சிறு பண்ணைகளாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு அங்கிருக்கும் அபூர்வமான மரங்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இதன் மூலம் அழிந்துவரும் சூழலில் உள்ள மரங்களினைப்பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. .

வந்தனா ராமனாதன் மற்றும் ஜினல் படேல்

சென்னையை அடிப்படையாகக்கொண்ட சந்தைப்படுத்தும் (Marketing) தொழில் சார்ந்த வந்தனாவும் ஜினலும்  முதலில் காபி ஷாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தனர். அதற்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்ஸி ஒன்றை துவங்கினர். அப்போதுதான் அவர்களுக்கென  நிர்வாகம் மற்றும் வசதிகளை மேம்படுத்த ஒரு அலுவலகம் தேவை என உணர்ந்தார்கள். இந்த இருவரும் தங்கள் அனுபவத்தின் மூலம்  wSQUARE  அமைப்பை ஏற்படுத்தினர். இந்த  அமைப்பின் மூலம் பெண் தொழில் முனைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள்  அனைவருக்கும் உதவும் வகையில் எனும் பெண்கள் மட்டுமேயான சக பணியாளர்  இடம் ஒன்றை நிறுவினார்கள். இது அலுவலக மற்றும் வீடு சார்ந்த டென்ஷன் எதுவுமின்றி வேலையில் கவனம் செலுத்த உதவுகிறது.

சென்னையில் பெண்களுக்கு மட்டுமேயான சக பணியாளர் இடம் ஒன்று வடிவமைக்கப்பட்டது இது வீட்டிலிருந்தே பணி செய்ய முடியாத அல்லது அதற்கான கட்டமைப்பு தேவைப்படும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாய் குழந்தை பெற்ற தாய்களுக்காக தனித்து வடிவமைக்கப்பட்டது. பொதுவாக நிறைய பெண்கள் கர்ப்ப காலங்களிலும், குழந்தை பேற்றுக்குப்பின்னும் பணியில் தொடர முடியாத நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு Wsquare மூலமாக அந்த பெண்கள் பணிக்கோ, கட்டமைப்பிற்கோ திரும்பி தங்கள் வருங்காலத்தினை மேம்படுத்தும் தொழிலை கட்டமைக்க உதவுகிறது. அவர்களின் இந்த காக்கும் முயற்சி தற்போது சென்னையில் பெண் தொழில் முனைவோர்களின் வழிகாட்டியாக மற்றும் சாத்தியமான நிதி உதவிகளின் மூலமாகவும் உதவி வருகிறது. 

சமையல்கலைஞர்களுடன் இணைந்து தேவைப்பட்டவர்களுக்கு உணவை கொண்டுதருதல், பியூட்டி பார்லர் சேவை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகளுக்கான உதவி , வேலை செய்யும் தாய்மார்களுக்கான அருகிலுள்ள குழந்தைகள் பாதுகாக்கும் மையங்களை ஏற்பாடு செய்வதுடன் அல்லாமல் குழந்தைகளை வீடியோ மூலம் பெற்றோர் கண்காணிக்கும் வசதியையும் வழங்குகிறது.வேலை செய்யும் பெண்கள் Wsquare இல் தங்கள் மளிகைப்பொருட்களை வாங்கிவைத்து அவர்கள் வீட்டிற்கு செல்கையில் எடுத்துக்கொள்ள செய்யும் வசதி என பல வகையில் பெண்களுக்கு உபயோகமான வசதிகள் இங்கு தரப்படுகின்றன.

இந்த சிறப்பான பெண் தொழில் முனைவோர்களின் உத்வேகமும் ஆற்றலும் மென்மேலும் வளர்ச்சி பெறும், மேலும் பலரை ஊக்கப்படுத்தி சென்னை மட்டுமன்றி உலகின் எல்லா மூலைகளிலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.

About the Author

Sonalika Arora

An engineer by profession but a writer at heart, I try to seek happiness through my writing. I am an avid reader, a blogger, and I like to write about books and my reflections on read more...

2 Posts | 6,113 Views
All Categories