ஒரு பிரெஷராக சிறந்த ரெசுமே எழுதுவதற்கு எளிமையான வழிகாட்டி!

ஒரு பிரெஷராக நீங்கள் வேலை தேடுவதற்கு ஒரு ஈர்க்கக்கூடிய ரெசுமே (தற்குறிப்பு விண்ணப்பம்) எழுதுவது முதல் படியாகும். இந்த கட்டுரை ஒரு சிறந்த ரெசுமே எழுத உங்களுக்கு உதவும்!

ஒரு பிரெஷராக நீங்கள் வேலை தேடுவதற்கு ஒரு ஈர்க்கக்கூடிய ரெசுமே (தற்குறிப்பு விண்ணப்பம்) எழுதுவது முதல் படியாகும். இந்த கட்டுரை ஒரு சிறந்த ரெசுமே எழுத உங்களுக்கு உதவும்!

 Original in English

ஒரு நிறுவனத்தில் இன்டெர்வியூ முன்னதாக முதல் அபிப்ராயத்தை உருவாக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கு உங்கள் தற்குறிப்பு விண்ணப்பம் அவர்களுக்கு உங்களை தெரியப்படுத்தும் முதல் விஷயமாக அமைகிறது. இது உங்கள் தகுதிகளை விவரிக்கிறது. உங்களை பணியமர்த்துவதற்கு தகுதியானவரா என்று கூறுகிறது.

அடிப்படையில், உங்கள் வருங்கால நிறுவனம் உங்களைப் பற்றி அறியவும் உங்களையும் உங்கள் திறமைகளையும் அறிந்துகொள்ள தற்குறிப்பு விண்ணப்பத்தில் இணைக்கப்படவேண்டும். அதனால்தான் அது புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் எழுதப்பட வேண்டும்.

ஒரு நல்ல, நன்கு வடிவமைக்கப்பட்ட விண்ணப்பம் எவ்வாறு எதுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்

·         இது நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்கள் (கன்சல்டண்சி) கவனத்தை ஈர்க்கிறது.

·         விண்ணப்பம் உங்கள் திறமை, செயல் திறம் மற்றும் வலுவான திறன்களை எடுத்து கூறுகிறது.

·         ஒரு ப்ராஜெக்ட் அல்லது பொசிஷனிற்கு நீங்கள் தகுதியான ஊழியர் என்பதை இது காட்டுகிறது.

·         அடிப்படையில், இது உங்களுக்கு நேர்காணலுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது.

ஒரு ரெசுமே எழுதுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் 

தொழிலாளர் துறையில் ஒரு புதிய நுழைவாயிலாக, ஒரு ரெசுமே எழுதுவதில் பதட்டம் இருப்பது இயல்பானது. விவரிக்க  திடமான பணி அனுபவம் இல்லை என்று தோன்றலாம். உங்கள் முதல் வேலை வாய்ப்பை பெற உங்கள் தகுதிகள் மற்றும் உங்கள் திறமை தொகுப்புகளை நீங்கள் எடுத்து கூற வேண்டும்.

வேலை தேடத் தொடங்கும் ஒரு புதிய பணியாளராகக் நீங்கள் கருத்தில் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. உங்கள் விண்ணப்பத்தில் அனுபவ கல்வியை எப்படி எடுத்து காட்டுவது போன்ற விஷயங்களை உள்ளடக்கியது.

நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான விண்ணப்பங்களைப் பெறுகிறார்கள். இருப்பினும், அந்த நேர்காணலில் நீங்கள் ஒரு வாய்ப்பைப் பெற, நீங்கள் தனித்துவமான ஒரு விண்ணப்பத்தை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் சுயவிவரத்தை கவனிக்க உதவும் சில உத்திகள்

 உங்கள் விண்ணப்பத்தை கவனிக்கும் மூன்று உத்திகள்:

 ·         உங்களை ஒரு அஸெட் டு தி கம்பெனியாக நிலைநிறுத்துங்கள்

·         உங்கள் பிளஸ் பாயிண்டுகளை அடையாளம் கண்டு அவற்றை நன்றாக எடுத்துக் காட்டவும்

·         உங்கள் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும்

நீங்கள் இலக்கு வைக்க விரும்பும் நிறுவனங்களின் அடிப்படையில் இன்னும் துல்லியமாக இருக்க உதவும் விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள். உங்கள் தொழில் நோக்கங்கள் மற்றும் தகுதிகளை உங்களுக்கு சாத்தியமான நிறுவனங்களின்  தேவைகளுடன் பொருத்துவதற்கு, பின்வருவனவற்றை அடையாளம் காண்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்:

 ·         நீங்கள் இலக்கு வைக்க விரும்பும் வேலை வகை

·         உங்களுக்கு சாத்தியமான நிறுவனங்களின் தேவைகள்

·         நீங்கள் செதுக்க விரும்பும் தொழில் பாதை

மேலே உள்ள அனைத்தையும் நீங்கள் அடையாளம் கண்டவுடன், நீங்கள் உங்கள் சுயவிவரத்தை கட்டமைக்கத் தொடங்கலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​இந்த பிரிவுகளைச் சேர்ப்பதை உறுதிசெய்யவும்:

 ·         தனிப்பட்ட தொடர்பு விவரங்கள்

·         குறிக்கோள்

·         கல்வி பின்னணி

·         பணி அனுபவம் (இதில் இன்டர்ன்ஷிப் அல்லது தன்னார்வ பணிகளும் அடங்கும்)

·         பிற தொடர்புடைய திறன்கள் (மென் திறன்கள்)

ஒரு விண்ணப்பத்தை எழுதிய பிறகு என்ன நடக்கும்?

உங்கள் விண்ணப்பம் தயாரானவுடன், அது எந்த நிறுவனத்திடம் செல்கிறது என்பதை நீங்கள் நிர்வகிக்க வேண்டும். சிறந்த விண்ணப்பத்தை உருவாக்க நீங்கள் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ளீர்கள். அடுத்த கட்டமாக, உங்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய அல்லது பணியமர்த்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நபர்களின் கைகளில் அதை கொண்டுசேர்க்கவேண்டும்.

நீங்கள் நேரடியாக நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம். நெட்வொர்க்கிங் மூலம் இணைப்புகளை நிறுவலாம் அல்லது வாய்ப்புகளை இணையத்தில் தேடலாம்.

உங்கள் விண்ணப்பத்தை திறம்பட எடுத்துச்செல்ல, நீங்கள் செய்ய வேண்டியது:

 ·         ஈர்க்கக்கூடிய முகப்பு கடிதங்களை (கவர் லெட்டர்) எழுதுங்கள்.

·         LinkedIn மற்றும் பிற தொடர்புடைய சமூக ஊடக தளங்களில் நெட்வொர்க்கிங் செய்யுங்கள்.

·         Monster.com, glassdoor.com, Naukri.com போன்ற வேலை தேடும் தளங்களில் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள்.

உங்கள் மென் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எப்போதும் உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆவெரேஜ் மார்க்ஸை குறிப்பிடவும். வணிக நெட்வொர்க்கிங் சுயவிவர இணைப்புகளைச் சேர்க்கவும் மற்றும் தொழில்முறை மொழியைப் (பிசினஸ் லாங்குவேஜ்) பயன்படுத்தவும்.

உங்கள் ஆப்ஜெக்ட்டிவ் மற்றும் விஷனை எடுத்துக்கூறுவது போலவே ரெசுமேவை வடிவமைத்தல் முக்கியமானது. தடித்த, சாய்வு அல்லது பெரிய எழுத்துருவுடன் முக்கியமான விஷயங்களை முன்னிலைப்படுத்தவும். உங்கள் பாண்ட் சைஸ் மற்றும் ஸ்டைல், மார்ஜின் போன்றவை முதலாளியின் ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை உருவாகக்கூடும்.

விரும்பும் வேலைகளைத் தேடுவது கடினமாக இருக்கும். துறையில் அனுபவத்தை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். அனால் பிரெஷர் அனுபவமில்லாதவர்கள். இருப்பினும், சில நேரங்களில் நிறுவனங்கள் அனுபவமுள்ளவர்களுக்கு மாறாக கற்றுக் கொள்ளவும் வளரவும் விரும்பும் பிரெஷர்ஸ்சை அமர்த்த விரும்புகிறார்கள். உங்களை எப்படி நிலைநிறுத்துவது நீங்கள் வழங்கக்கூடியதை எப்படி உறுதியாக எடுத்துக்கூறுவது என்பதை அறிவது உங்களை தனியாக எடுத்துக்காட்டும்.

இதன் பதிப்பு முன்னர் இங்கு வெளியிடப்பட்டது.

 பட வரவுகள்: பெக்ஸல்ஸிலிருந்து ரோட்னே தயாரிப்புகள் மூலம் புகைப்படம்

About the Author

Vanshika Goenka

Vanshika Goenka is the CEO & Founder of Kool Kanya, an online career community for women where they can be part of a mutually supportive ecosystem that helps them learn from each other and grow read more...

1 Posts | 1,068 Views
All Categories