தன்னம்பிக்கையால் உயர்ந்த நம்ம ஊர் பெண்: குப்புலட்சுமி கிருஷ்ணமூர்த்தி

ஒரு நடுத்தர வர்க்கத்து பின்னணியில் இருந்து வந்த குப்புலட்சுமி, தன் விடாமுயற்சியாலும் திறமையாலும் இன்று Zoho நிறுவனத்தின் Evangelist ஆக உயர்ந்திருக்கிறார்.

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த, எளிய பின்னணியில் இருந்து வந்த குப்புலட்சுமி, தன் துவண்டு விடாத முயற்சியாலும் தனித்திறமையாலும் இன்று உலகப் பிரசித்தமான Zoho நிறுவனத்தின் Evangelist எனப்படும் உயர்மட்டப் பணிக்கு உயர்ந்திருக்கிறார்.

குப்புலட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர், உங்களில் அநேகம் பேருக்கு நன்கு பரிச்சயமாகி இருக்கும்.

தெரியாதவருக்கும் ஒரு எளிய கூகிள் தேடல் எல்லாம் சொல்லி விடும்! குப்புலட்சுமியின் ஜோஷ் டாக்ஸ் வீடியோ சொல்லும், இந்த சேலத்து பெண்ணின் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணத்தை.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், உண்மையில் நம்மை வீழ்த்திவிட வந்தவை அல்ல; மாறாக நம்மை நாம் முழுமையாக புரிந்துகொண்டு, புதிய புரிதலுடன் மேலெழும்பி புதிய பாதையில் முன்னேற வழிவகுப்பவை. இதை குப்புவின் கதை மீண்டும் உறுதி செய்கிறது.

இன்று, தான் பணியாற்றும் Zoho நிறுவனம் திறம்பட செயல்பட மாநில அரசு அமைப்புகள், ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்கள் மற்றும் ஆக்ஸிலரேட்டர்கள் (incubators and accelerators) ஆகியவற்றோடு சீரான கூட்டுறவு மற்றும் பரஸ்பர புரிதலை உருவாக்கி, ஆக்கபூர்வமான கூட்டணிகளை அமைத்துக் கொடுத்து தனது பணியைச் சிறப்புற செய்து வருகிறார், குப்பு.

பல உயரிய விருதுகள் தன்னைத் தேடி வரும் நிலைக்கு உயர்ந்திருக்கும் குப்பு, இன்றும் தன்னுடன் பணிபுரிபவர்கள் தொடங்கி அனைவரையும் மிகுந்த கனிவுடன் வழிநடத்தி வருகிறார்.

மேலும் பல சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார், குப்பு. குறிப்பாக, ‘புத்ரி‘, ‘டீம் எவெரெஸ்ட் என்.ஜி.ஓ‘ ஆகிய கல்வி மேம்பாட்டிற்காக முனைப்புடன் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முக்கியப் பங்காற்றி வருகிறார். இதற்கென நேரம் ஒதுக்கி பல மாணவரோடு நேரில் உரையாடி ஊக்கமளித்து வருகிறார்.

ஒரு பெண்ணால் ஒரு அளவிற்கு மேல் சாதிக்க முடியாது என்ற மடமையை, glass ceiling- ஐ உடைத்தவரான குப்பு, ஒரு சிறு குழந்தையின் இயல்புடன், கலை, இலக்கியம், இயற்கை, நல்ல உணவு என வாழ்வின் அத்தனை கொடைகளையும் உவந்து ரசிக்க நேரத்தை உருவாக்கி கொள்கிறார்.

Never miss real stories from India's women.

Register Now

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமநிலையையும் அழகையும் உருவாக்க விழையும் குப்பு தனது குடும்பத்தையும் சிறப்புற கொண்டாடி, தனது மகளை சுயசார்புடைய பெண்ணாக பரிணமிக்க, ஒரு தாயாக நிறைந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

தனது அன்றாட வாழ்க்கையில் மினிமலிசம் மற்றும் இயற்கை வளத்தை பேணும் வழிகளைக் கடைபிடித்து, பொறுப்புணர்வுடன் ஒவ்வொரு நாளையும் அணுகுகிறார், குப்பு. இளவயதிலேயே வாழ்க்கையின் கடின சவால்களை எதிர்கொண்டதால், ‘mental wellness’ எனப்படும் மனஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து, மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்து கடைப்பிடிக்கிறார்.

அதனால் தான், மனித ஆற்றலால் உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகளுக்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டாக விளங்குகிறார், குப்புலட்சுமி.

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 53,393 Views
All Categories