லீனா மணிமேகலை போன்ற இரும்பு மனுஷிகள் நம் சமூகத்திற்கு தேவை!

லீனா மணிமேகலை, எனக்கு பிடித்த எழுத்தாளர், அதையும் தாண்டி எனக்கு பிடித்த மனுஷி என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

லீனா மணிமேகலை, எனக்கு பிடித்த எழுத்தாளர், அதையும் தாண்டி எனக்கு பிடித்த மனுஷி என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

கவிதாயினி, குறும்பட இயக்குநர், திரைப்படம் ஒன்றும் இயக்கி இருக்கிறார். இதெல்லாம் தாண்டி ஒரு தனித்துவமிக்க பெண்ணாய் இவரது ஆளுமை எனக்கு மிகவும் பிடிக்கும். 

சர்ச்சைக்குரிய மீ டூ பகிர்வுகளின் போதும், தனித்துவமாய் களமாடும் பொழுதுகளிலும் இவரது தெளிவான அணுகுமுறை மற்றும் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் என்னை மிகவும் ஈர்த்தது.

தமிழ்க் கவிஞராக தன் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்த லீனா மணிமேகலை பின்பு ஆவண நிழற்படக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர் என பலதுறைகளில் தன் பயணத்தை விரிவாக்கினார். 

பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன.

“I am my own experiment, certain questions start haunting me, and that sets me into a journey. I do find answers sometimes but most of the times end up with more questions…”

இது அவர் தன்னுடைய வலைத்தளங்களில் தன்னைப்பற்றி தானே அளித்துக்கொள்ளும் சுய அறிமுகம்.

“நானே என் சுயபரிசோதனையின் களம். சில கேள்விகள் என்னை நினைவில் துரத்தும்; அவற்றிற்கு விடை தேடுகையில் சில விடைகள் கிடைக்கும் ஆனால் பல  விடைகள் மேலும் பல கேள்விகளுடன் முடிகின்றன…”

என தன்னைத்தானே அழகாக விமர்சித்துக்கொள்ளும் இவர் சன் டிவி, ஜீ டிவி, என்டிடிவி தொலைக்காட்சி சேனல்களுக்காக ஆவணப்படங்கள் பல எடுத்துள்ளார்.

இவருடைய  தமிழ் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு பல விருதுகளை பெற்றிருந்தாலும் இவரது ஆர்வம் திரைக்கான எழுத்துக்களே. இந்தியாவின் பல சினிமா பயிலகங்களில் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுப்பதற்கான பயிலரங்கங்கள் நடத்தி வருகிறார். இவரது படைப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • தேவதைகள் (ஆவண நிகழ்படம்)
  • பெண்ணாடி
  • மாத்தம்மா
  • பறை (ஆவண நிகழ்படம்)
  • பலிபீடம் (ஆவண நிகழ்படம்)
  • தீர்ந்து போயிருந்த காதல்

பெண்ணியம் பேசும் இவரது கவிதை வரிகள் வீரியம் மிக்கவை.

வீசிய
சொல்லில்
அறுந்து தொங்கியது
தலை
நிஜமாகத்தான்
புலந்தனா
எனக்
காதுகள்
புடைத்துச்
சமைந்தன
பிளந்த நிலத்தின்
ஓலமானது
சுருங்கி சுணங்கியது
நிழனின் இருமையாய்
சுழன்றடித்த
சொல்லின்
கசாப்பு மணத்தில்
அன்பு
மூச்சடைத்தது
சொன்னதில்
உறைத்தது
சொல்லாததின்
வீரியம்” (ஒற்றையிலை யென.167)

ஆணின் அவதூறு சொல்லில் உறையும் பெண்ணின் மன உணர்வைப் பாடியுள்ளார். இதில்  பெண்மையின் வலியின் வீரியம் மிக அழகாக சொல்லப்பட்டிருந்தது. பெண் எனும் சக்தியினுள் நயவஞ்சக வார்த்தைகளின் வீச்சினை முனை மழுங்கச்செய்யும் அறிவுக்கூர்மை இவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

சமூக நீதிக்காக போராடிவரும் இவரின் ஆவண படங்கள் இனம், பாலினம் உலகமயமாதல், மனித உரிமைகள் என பல பரிமாணங்கள் கொண்டவை, சர்வதேச திரை விழாவில் பல பெருமை மிக்க விருதுகளை வாங்கியுள்ளார்.

உண்மையில் பொதுத்தளத்தில் சமகால எழுத்தாளராக, இவருடைய பல கருத்துக்களில் முரண்பட்ட கருத்து எனக்கு இருந்தபோதும். ஒரு தைரியமான, தெளிவான பெண்ணாய் என்றுமே எனக்கு ஒரு ஆச்சரியம் அளிக்கும் பெண்ணாகவே லீனா திகழ்கிறார். 

லீனாவின் செங்கடல் எனும் புதினம் அவருக்கு NAWFF விருதினை சிறந்த ஆசிய பெண் சினிமா விருதினை பெற்றுத் தந்தது. முதலில் தணிக்கைப்பிரிவால் தச செய்யப்பட்ட இப்படம் பின்பு பல மாதங்களுக்குப் பின் சட்ட ரீதியான போராட்டங்களுக்குப் பின் வெளிவந்தது. இவரது இன்னொரு ஆவணப்படமான ‘ தேவதை ‘ மும்பையில்  திரையிடப்பட்டு தங்க சங்கு விருதினை பெற்றது.

Image Source: லீனா மணிமேகலையின் பெஸ்புக் பேஜ்

About the Author

Akila Jwala

writer , poetess, educationist and social activist read more...

9 Posts | 15,318 Views
All Categories