சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீபாவளியைக் கொண்டாட ஏழு எளிதான வழிகள்

அணைத்து உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அக்கறையும் பொறுப்பும் உண்டு. இந்த தீபாவளிக்கு நமது சுற்றுசூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்வதன் மூலம் நாம் பசுமை தீபாவளியைக் கொண்டாடலாம்.

அணைத்து உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அக்கறையும் பொறுப்பும் உண்டு. இந்த தீபாவளிக்கு நமது சுற்றுசூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்வதன் மூலம் நாம் பசுமை தீபாவளியைக் கொண்டாடலாம்.

Original in English

தீபாவளி அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. இதை சிறந்த வகையில் கொண்டாடுவோம். இந்த தீபாவளிக்கு பசுமையான கொண்டாட்டங்களுக்கு மாறுங்கள். மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்க்கவும். 

இந்த மாதம் பண்டிகைகள் நிறைந்துள்ளதால் மக்கள் பொதுவாக இந்த நாட்களில் பிஸியாக இருக்கிறார்கள். குழந்தைகள் கூட அதை உணர்கிறார்கள். அவர்கள் அவர்களை சூழ்ந்துள்ள மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் விரும்புகிறார்கள். கடந்த சில வாரங்களாக பல பண்டிகைகளை கொண்டாடிய பிறகு பிரமாண்டமான திருவிழா வரவிருக்கிறது. அது தான் தீபாவளி. மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் முழுமையாகக் கொண்டாட விரும்புவதால், அவர்களது பிஸியான வாரத்தைத் திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீபாவளியை எப்படி கொண்டாடுவது

தீபாவளிக்கு பசுமையாக மாறுவதும், பட்டாசுகளை பயன்படுத்தாமல் இருப்பதும் தீபாவளி கொண்டாட்டங்களை முழுமையடையச் செய்வதில்லை என்று நீங்கள் நினைத்தால், நமது எதிர்கால சந்ததியினரின் (குழந்தைகள்) மேம்பாடு மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்காக அதைச் செய்வோம். ஒரு சிலரின் கூற்றுப்படி, பட்டாசுகள் இல்லாத தீபாவளி முழுமையடையாது.

பட்டாசுகளை ஏன் வேண்டாம் என்று கூற வேண்டும் என்பதை ஆராய்வோம்.

 • இது புகைமூட்டத்தை உருவாக்குகிறது
 • இது தீ விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
 • மற்ற உயிரினங்கள் (வயதான/குழந்தைகள்/கர்ப்பிணிப் பெண்கள்/ஆஸ்துமா நோயாளிகள்) மற்றும் செல்லப்பிராணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
 • எஞ்சியிருக்கும் பட்டாசுகளால் ஏற்படும் நில மாசு மற்றும் ஒலி மாசுஅதிகமாக இருக்கிறது.
 • குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.
 • சுவாசிக்க தீங்கு விளைவிக்கும் காற்றை மாசுபடுத்துகிறது.

இந்த தீபாவளிக்கு நாம் ஏன் பட்டாசுகளை வெடிக்காமல் இருக்கக்கூடாது என்பதே இங்குள்ள கேள்வி.

Never miss real stories from India's women.

Register Now

அப்படிக் கருதினால் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியை முழுமையடையாமல் இருப்பதாக உணர்கிறோமா?

நாம் ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்?

சின்ன வயசுல இருந்த நினைவுகளை வரவழைக்கும் தீபாவளி நமக்கு ஒரு சிறப்பு பண்டிகையாக கருதப்படுகிறது. தீபாவளி என்றால் சமஸ்கிருதத்தில் “விளக்குகளின் வரிசை” என்று பொருள். ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்து தனது மனைவி சீதா மற்றும் சகோதரர் லக்ஷ்மணனுடன் திரும்பியதற்காகவும், ராமர் ராவணனை தோற்கடித்த போரிற்காகவும் இது கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா ஒரு புதிய தொடக்கத்தை கொண்டாடுகிறது, தீமையின் மீது நன்மை மற்றும் இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடுகிறது.

இந்த தீபாவளிக்கு பசுமையாக மாற டிப்ஸ்

அணைத்து உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அக்கறையும் பொறுப்பும் உண்டு. இந்த தீபாவளிக்கு நமது சுற்றுசூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்வதன் மூலம் நாம் பசுமை தீபாவளியைக் கொண்டாடலாம்.

அதை உற்சாகப்படுத்த பின்வரும் வழிகளைப் பின்பற்றுவது எளிதானது மற்றும் சுவாரஸ்யமானது:

 • மண் விளக்குகளைத் தேர்ந்தெடுங்கள் – மாசு இல்லாதது மற்றும் வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. கவர்ச்சிகரமான வடிவங்களில் அவற்றை அமைக்கவும்.
 • கையால் செய்யப்பட்ட அட்டைகள் மற்றும் பரிசுகள் – உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் பொருளாதார மற்றும் சிறந்த உணர்ச்சி மதிப்புகளிக்கும் பரிசுகளைப் பெறுங்கள்.
 • உங்கள் வீட்டிற்கு இயற்கையான நறுமணத்தைக் கொடுங்கள் – வாசனை மெழுகுவர்த்தி மற்றும் தூபக் குச்சிகளைப் பயன்படுத்தவும்.
 • ரங்கோலி – உங்கள் வீடுகளுக்கு சூழல் பாராட்டும் ரங்கோலி வண்ணங்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் லட்சுமி தேவியை வரவேற்க சிறப்பான வெவ்வேறு ரங்கோலி வடிவங்களைப் பயன்படுத்துங்கள்.
 • மற்றவர்களின் தீபாவளியை அழகாக ஆக்குங்கள் – சில தொண்டு வேலைகளைச் செய்யுங்கள். உங்கள் தேவையற்ற ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள். உங்கள் வாகனங்களில் இனிப்புகள், சாக்லேட்டுகள், க்ரேயான்கள், பொம்மைகள் அல்லது பயனுள்ளதாக இருக்கும் சிறிய பெட்டிகளில் சேமித்து வைக்கவும். டிராஃபிக் சிக்னலில் பொம்மைகள் விற்கும் குழந்தைகளுக்கு அல்லது தெருவோரத்தில் காய்கறிகள் கொண்ட கூடையுடன் அமர்ந்திருப்பவர்களுக்கு அவற்றை பரிசளிக்கவும்.
 • மாலையில் உங்கள் இடத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்து ஒன்றாக இனிப்புகளை சாப்பிடுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து மகிழுங்கள்.
 • குப்பைகள் இருந்தால் சுத்தம் செய்து துடைப்பதை உறுதி செய்யவும்.

தீபாவளியை கொண்டாடுவது எப்படி

சில காலமாக, பலர் இந்த விழாவைக் கொண்டாடுவதற்கான வித்தியாசமான வழியைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் நாடு அல்லது உலகின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, அங்கு விழாவை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் சில கவர்ச்சியான இடங்கள் உள்ளன, அவை திருவிழாவின் வித்தியாசமான உணர்வைப் பெற சென்று வர வேண்டிய இடங்களாக உள்ளன .

தீபாவளியை நீங்கள் எந்த விதத்தில் கொண்டாடினாலும், அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது நமக்கு ஒற்றுமை, மகிழ்ச்சி, குழுப்பணி மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை பரிசாக அளிக்கிறது.

முதலில் இங்கு வெளியிடப்பட்டது.

பிக்சபே வழியாக படம்

கருத்துக்கள்

About the Author

Preeti Bhardwaj

Namaste !!! I'm Preeti Bhardwaj who's a working mummy of a beautiful, courageous not so little girl. I am a science graduate and a Management postgraduate woman. I was an entrepreneur who's now read more...

1 Posts | 595 Views
All Categories