வாயில் நீர் சுரக்கவைக்கும் ஒன்பது தீபாவளி இனிப்பு வகைகள் இந்த தீபாவளிக்கு நீங்கள் எளிதாக முயற்சி செய்யலாம்!

நம் வீட்டில் தீபாவளி அன்று இனிப்புகளைப் பரிசளித்து புன்னகையைப் பரப்புவோம். கொண்டாட்டங்களை மேலும் இனிமையாக்க மற்றும் வேலைப்பளுவை குறைக்கும் தீபாவளி இனிப்பு வகைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

நம் வீட்டில் தீபாவளி அன்று இனிப்புகளைப் பரிசளித்து புன்னகையைப் பரப்புவோம். கொண்டாட்டங்களை மேலும் இனிமையாக்க மற்றும் வேலைப்பளுவை குறைக்கும் தீபாவளி இனிப்பு வகைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Original in English 

தீபாவளி வருகிறது என்ற எண்ணத்தில், என் மனம் முழுவதும் தீபாவளி இனிப்பு வகைகளால் நிரப்பப்பட்டு இருக்கின்றன! இந்த தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாட முடிவு செய்து, நாங்கள் மற்றவர்களை வெடிகளையும் மத்தாப்புகளையும் தவிர்க்க ஊக்கப்படுத்துகிறோம். பசுமை தீபாவளிக்காக செலவிடும் நேரத்தைக் கொண்டு மேலும் ஆக்கப்பூர்வமாக இருக்க நம்மைத் தூண்டுகிறது. பெரும்பாலானோர் தீபாவளி இனிப்புகளை தயாரித்து, குழந்தைகளும் குடும்பத்தினரும் நேரத்தை செலவிட சிறந்த வழியாக இனிப்பு தயாரிப்பதை கருதுகிறார்கள்.

இந்த கட்டுரையில் சில தமிழ்நாட்டின் பாரம்பரிய தீபாவளி இனிப்புகளான அதிரசம், பருப்பு பாயசம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலத்திலிருந்தும் சில இனிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன! செய்து மகிழிலுங்கள்.

இனிப்பு சமோசா

இந்த இனிப்பு சமோசா சிங்காரா என்ற பெங்காலி பதிப்பாகும். இந்த சிங்காரா ஒரு இனிப்பு; வழக்கமான மாவா குஜியாவை விட ருசியானது. வெல்லம், தேங்காய் மற்றும் சில மொறுமொறுப்பான உலர்ந்த பருப்புகளான பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரியை கொண்டு இது நிரப்பப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கு பிடித்த கலவையை கொண்டும் முயற்சி செய்யலாம் – தீபாவளி இனிப்புகளில் இது பெரும்பாலும் விரும்பப்படும் ஒன்றாகும்.

இந்த உணவின் ஆசிரியர் த்ரிஷா உங்களுக்கு எளிதாக்கும் வகையில், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை அனைத்தையும் கொண்ட செய்முறையின் மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய இனிப்புகளில் இதுவும் ஒன்று.

சிங்கார: தீபாவளி இனிப்பு செய்முறை

அதிரசம்

மீண்டும் ஒரு வெல்லம் அடிப்படையிலான இனிப்பு. ஆனால் இனிப்பு சமோசாவின் மேலே உள்ள செய்முறையிலிருந்து மிகவும் வித்தியாசமான சுவையாக இருக்கும். பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் செய்யப்படும் அதிரசம், அரிசி மாவுடன் கூடிய கலவையானது. அதிரசம் வெளியில் கொஞ்சம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும். இது ஒரு உண்மையான பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு உணவாகும். இதில் இரண்டு முக்கிய பொருட்கள் மட்டுமே உள்ளன.

அதிரசம்: தீபாவளி இனிப்பு செய்முறை

மோதிச்சூர் லடூ

தீபாவளியின் போது கட்டாயம் லட்டு இருக்கவேண்டும்! இந்த தீபாவளி இனிப்புகளில் மோட்டிச்சூர் லட்டுவும் ஒன்று. இதற்கு விளக்கம் தேவையில்லை. இது சந்தேகத்திற்கு இடமின்றி பலருக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பாகும். ஒவ்வொரு படிக்கும் லேபிள்களுடன் அற்புதமான புகைப்படங்களை ஆசிரியர் வழங்கியுள்ளார். அற்புதமான லட்டுவிற்கு செய்முறையை பின்பற்றவும்!

மோட்டிச்சூர் லடூ தீபாவளி இனிப்பு செய்முறை

பருப்பு பாயசம்

மீண்டும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவான பருப்பு பாயசம் பண்டிகை நேரத்தில், குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை கவனித்துக்கொள்கிறது. இந்த ஆண்டு தீபாவளி இனிப்புகளின் பட்டியலில் புரதம் நிறைந்த இந்த பருப்பு பாயசத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள உணவுப் பிரியர் என்றால், செய்முறையில் விவரிக்கப்பட்டுள்ளபடி பல மாறுபாடுகளுடன் தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு விருந்து உங்களை திருப்திப்படுத்தும்.

பருப்பு பாயாசம் தீபாவளி இனிப்பு செய்முறை

பாசிப்பருப்பு அல்வா/ அசோகா அல்வா 

ஹல்வாவின் நெய் மிதப்பதை நான் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன்! அதே காரணத்திற்காக, மற்ற தீபாவளி இனிப்புகளுடன் ஒப்பிடும் போது, ​​குறைந்த அளவு ஹல்வா உண்டவுடன் கூட உங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணருவீர்கள். நீங்கள் கலோரிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பவராக இருந்தால், பெரும்பாலான இனிப்புகளுக்கு மாறாக நெய்க்குப் பதிலாக எண்ணெயின் உதவியுடன் செய்யப்படும் பாசிப்பருப்பு ஹல்வாவுக்கான இந்த குறைந்த கலோரி பதிப்பை முயற்சிக்கவும்.

பாசிப்பருப்பு/அசோகா அல்வா தீபாவளி இனிப்பு செய்முறை

காலா ​​ஜாமுன்

குலாப் ஜாமூன் பல இந்திய குடும்பங்களில் பிரபலமான இனிப்பாக மாறியுள்ளது. ஆனால் காலா ஜாமூன் இந்த ஆண்டு தீபாவளி இனிப்புக்கு சமமான அல்லது சிறந்த விருப்பமாகும்! இது வழக்கமான குலாப் ஜாமூனில் இருந்து சிறிது மாறுபட்டது! புதிதாக சமைக்க கற்றுக்கொள்ளும் ஒருவர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை சரியாகப் பின்பற்றினால் இதை எளிதாகத் தயாரிக்க முடியும் என்பதற்காக, அழகான புகைப்படங்களுடன் ஒவ்வொரு படியிலும் மிக விரிவான விளக்கத்தை ருச்சி அளித்துள்ளார்.

காலா ​​ஜாமுன் தீபாவளி இனிப்பு செய்முறை

கேசர் மலாய் சாண்ட்விச்

இந்த தீபாவளி ஸ்வீட் சாண்ட்விச்சைச் சாப்பிடும்போது, ​​வாயில் கரைய வைப்பது அதன் கலவையா அல்லது சுவையா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! தீபாவளி இனிப்புகளில் கேசர்/குங்குமப்பூ மற்றும் பால் திரட்டி நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய ஒன்று.

இது நிச்சயமாக மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் தயாரிக்கப்பட்ட ஒரு செய்முறையாகும். ஏனெனில் இதன் ஒவ்வொரு பகுதியும் உணவு சொர்க்கத்திற்கு சுவை ஊட்டுவது போன்று கவனமாக சேகரிக்கப்படுகிறது!

கேசர் மலாய் சாண்ட்விச் தீபாவளி இனிப்பு செய்முறை

சேனா போடா

ஜகந்நாதரின் பூமியான ஒடிசாவில் இருந்து ஒரு பிரபலமான செய்முறை இது. இதன் நேரடி அர்த்தம் ‘வறுத்த சீஸ்கேக்’ என்பதாகும். சேனா அல்லது பனீர் (பாலாடைக்கட்டி) நெய், சர்க்கரை, ஏலக்காய் தூள், அரிசி மாவு மற்றும் சில உலர் பழங்கள் போன்ற மிக அடிப்படையான பொருட்களுடன் அன்பு மற்றும் அக்கறையுடன் பேக் செய்யும்போது இந்த ருசியான தீபாவளி இனிப்பை நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

சேனா போடா தீபாவளி இனிப்பு: https://www.vegrecipesofindia.com/chhena-poda-recipe/

கலாகண்ட்

ஸ்வஸ்தி விவரித்த இந்த புதுமையான உத்தியைக் கொண்டு வெறும் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ருசியான இனிப்பு இது. மணிக்கணக்கில் பாலை குறைக்கும் நீண்ட செயல்முறைக்கு பதிலாக, இந்த எளிய உத்தியைப் பயன்படுத்தி, இந்த தீபாவளிக்கு சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் வாயில் கரையும் கலகண்டை செய்து பாருங்கள்.

கலாகண்ட் தீபாவளி இனிப்பு: https://www.indianhealthyrecipes.com/easy-kalakand-in-10-mins-with-condensed-milk/

இந்த தீபாவளிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்த தீபாவளி இனிப்புகள் பற்றி எங்களிடம் கூறுங்கள்!

About the Author

Sowmya Baruvuri

Loves to click pictures, dance, cook, travel, craft, read and write! read more...

3 Posts | 4,575 Views
All Categories