பொதுவான சளி மற்றும் இருமலுக்காக இந்த இயற்கையான வீட்டு வைத்தியங்களை உபயோகித்து பாருங்கள்!

கீழ் காணும் நிவாரணங்கள், பொதுவான சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படுபவை, மாத்திரைகளை விழுங்க ஆரம்பிக்கும் முன், இந்த இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாமே!

கீழ்காணும் நிவாரணங்கள், பொதுவான சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படுபவை, மாத்திரைகளை விழுங்க ஆரம்பிக்கும் முன், இந்த இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாமே!

இயற்கை அழகானது. வெறும் பயணங்களிலும், அழகான அதன் இருப்பிலும் மட்டுமல்ல அதன் மூலம் பெறப்படும் எண்ணற்ற பயன்கள். அதன் மூலிகைகள், அதன் எண்ணற்ற சாராம்சங்கள் என பல வகையிலும் இயற்கை மிகச்சிறப்பானதே.

மூலிகைகள் இயற்கையான மருந்தாக நாம் உடல் நலியும்போது தேவைப்படுவதுடன் கூடுதலாக நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. முக்கியமாக வீட்டில் குழந்தைகள் ஜீரம், சளி, இருமல் என பலமுறை அவதியுறும்போது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.  

என் மகனுக்கு, மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன்னால், வீட்டு வைத்தியம் செய்வேன் அதுவும்  குறிப்பாக வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெற தாமதமாகும்போதோ அல்லது அவசர உதவி தேவைப்படும்போதோ  மருத்துவரிடம் அழைத்து போவதுண்டு. அப்படி போகும்போதும் வீட்டில் தயாரித்த ஒரு கஷாயமாவது எடுத்துக் கொள்ளாமல் செல்வதில்லை. பெரும்பாலும் குழந்தை  மருத்துவரும் ஒரு அதிக வீரியமற்ற மருந்தையே, அதிலேயே குணமாகிறதா எனப் பார்க்க முதலில் தருவார். பொதுவாக குழந்தைகள் பள்ளி செல்லும் நாட்களில் அடிக்கடி ஃபுளு போன்றவற்றுக்கு அதிகம் ஆளாவதுடன் அது சரியாவதற்கும் அதிக நாட்கள் பிடிக்கிறது.

சளியை விரட்ட, வித்தியாசமான பல ரெசிப்பிகள் இருந்தாலும், வென்னீர் குடிப்பது, உப்புத்தண்ணீர் கொப்பளிப்பது, அடிக்கடி ஆவி பிடிப்பது போன்ற எளிய சில ஆலோசனைகள் ஓரளவு உதவுகின்றன. இம்மாதிரியான உடல்நலக்குறைவுகள் ஏற்படும் நேரங்களில் எடுக்க வேண்டிய  வெவ்வேறு வீட்டு வைத்தியங்களின் பட்டியல் தங்கள் தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கஷாயம் 

சளி மற்றும் இருமலுக்கு பலகாலமாய் சோதித்து கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த மருந்து கஷாயம் ஆகும், உங்களுக்கு நேரம் இல்லாத போது நீங்கள் மஞ்சள் கலந்த பால் எடுத்துக்கொண்டாலும், பல்வேறு மூலிகைகள் அடங்கிய கஷாயம் மிகவும் பயன் தரக்கூடிய ஒன்றாகும்.

பொங்கல்/கிச்சடி

திட உணவு என வரும்போது உடல் நலக்குறைவின்போது எடுத்துக்கொள்ள முடிந்த புகழ்வாய்ந்த குறிப்பு இதுதான். நம் உடல் பல தொற்றுகளுக்கு எதிராக போராட வேண்டி உள்ளதால், எளிதில் ஜீரணமாகக் கூடிய இலேசான உணவினை எடுத்துக்கொள்வதே நன்மை தரும். பாசிப்பயிறில் செய்யப்படும் கிச்சடி எளிதில் செரிக்கும் உணவு என்பதால் உடல்நலக்குறைவின்போது எடுத்துக்கொள்ள மிகவும் உகந்தது. 

சூப் வகைகள்

சூப், சளி உபாதையின்போது தேவைப்படும் ஒரு எளிய திரவ உணவு. சூடான எளிய திரவ உணவான சூப் வயிறை இலேசாக வைத்துக்கொள்ளும் சத்தான ஒன்று மட்டுமன்றி திட உணவினைப்போல திருப்தி தரக்கூடிய ஒன்றாகும்.

பூண்டு ரசம்

தென்னிந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க சாதத்துடன் எடுத்துக்கொள்ள முடிந்த ரசம், ஒரு சூப் போலவும் எடுத்துக்கொ:ள்ள முடியும்.பொதுவாக உடல் நலம் குறைந்த நேரங்களில் உணவின் சுவை தெரியாத அத்தகைய நேரங்களில் திடமான, மிளகு காரம் சேர்ந்த பூண்டு ரசம் இணையில்லாத ருசியுடன் இருக்கும். 

மசாலா டீ

கஷாயம் என்றால் பயப்படுபவர்கள் டீயை விரும்புபவர்களுக்கு  சில மசாலா பொருட்கள் சேர்ந்த தேநீர் சளியில் அவதியுறும்போது ஒரு பொருத்தமான பானம் ஆகும். உடல் பாதித்த நேரம் மட்டுமின்றி  வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மழைக்காலங்களில் மிகவும் இரசிக்கத்தகுந்த ஒன்று.

சம்பா கோதுமை – உடைத்த கோதுமை ரவை

இதுவும் சளி பாதிப்பின்போது உபயோகப்படுத்தப்படுவதே. செய்முறை குழந்தைகளுக்கானது என்றாலும் பெரியவர்களுக்கும் பிடித்தமானதாகவே இது விளங்குகிறது. சம்பா கோதுமையை கிச்சடியாகவும் செய்யலாம். உடல்நலன், சளி பாதிப்பின்போது சிலசமயம் கிச்சடி செய்ய சலிப்பு ஏற்படும்போது இனிப்பான சம்பா கோதுமை ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

எலுமிச்சை – தேன் – இஞ்சி தேநீர்

பாலில்லாமல் தயாரிக்கப்படும் எலுமிச்சை-இஞ்சி-தேநீர், சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மசாலா தேநீர் போல் இதில் பால் சேர்க்கப்படுவதில்லை ஆனாலும் இது எலுமிச்சையின் சுவையுடன் புத்துணர்வு தருகிறது. இதை வெதுவெதுப்பான அல்லது சூடான நீருடன் பருகினால் உடல் இலேசாக புத்துணர்வுடன் இருக்கும்.

கற்பூரவல்லி – ஓமம் 

இதை நீங்கள் உங்கள் தோட்டத்தில் நிச்சயம் வைக்க நான் வலியுறுத்துகிறேன். இந்த அருமையான இலை உங்கள் சளி இருமலில் இருந்து சரிசெய்யும் அற்புதமான இலை ஆகும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதன் பயன் அதிகம். நான் இந்த இலையை உபயோகித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளேன்.

வெற்றிலை கஷாயம்

நம்மில் பலர் தாம்புலத்திற்கு உபயோகிக்கப்படுத்தப்படும் வெற்றிலை செரிமானத்திற்கு உதவும் என்பதை அறிவோம் – அதுமட்டுமல்ல இது சளிப்பிரச்சனைக்கும் சிறந்த மருந்து, இந்த கஷாயத்தை உபயோகித்து சிறந்த பலன் பெறலாம்.

உண்மையை சொல்வதென்றால், எனக்கு சில நேரங்களில், மூலிகை மருந்துகளை வீட்டில் தயாரிக்க  சலிப்பு ஏற்பட்டாலும் வீட்டில் எளிய செய்முறைகளை பின்பற்றும் மூலிகை வைத்தியங்களை தயார் செய்ய நான் நிறுத்துவதே இல்லை.

என் எளிய வீட்டில் கிடைக்கும் துளசி, புதினா, கற்பூரவல்லி, மிளகு, மஞ்சள், பட்டை இலை, ஏலக்காய், பனைவெல்லம், தனியா விதைகள், சீரகம், வெந்தயம், மஞ்சள்,பெருஞ்சீரகம், ஓமம் , நட்சத்திர சோம்பு ஆகியவற்றை நீரில் அரை பங்காக குறையும் வரை கொதிக்க வைத்து இரு நாட்களுக்கு ஒருமுறை குடியுங்கள்.

Image source: Shutterstock

மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா

About the Author

Sowmya Baruvuri

Loves to click pictures, dance, cook, travel, craft, read and write! read more...

3 Posts | 4,614 Views
All Categories