உங்கள் உணவில் சுவை சேர்க்க 5 ஆந்திர போடி ரெசிபிகள்

மணக்கும் அனுபவத்துடன் உங்கள் உணவை ரசிக்க இங்கு சில ஆந்திர பொடி செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மணக்கும் அனுபவத்துடன் உங்கள் உணவை ரசிக்க இங்கு சில ஆந்திர பொடி செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

வெளியில் மழை பெய்யும் பொழுது உங்கள் உணவை காரசாரமாக உண்ணத்துவங்குவது சிறப்பாக இருக்கும் இல்லையா?

என் குழந்தைப்பருவம் முதலே, நான் ஆச்சர்யமாய் நினைப்பதுண்டு ஏன் நம் சாப்பாட்டு மேஜை சின்ன சின்ன அழகிய ஜார்களால் நிரம்பியிருக்கிறது என்று. இப்போது எனக்கு திருமணமான நாள் முதல் என் உணவு மேஜையும் அப்படியே இருக்கிறது, ஏன் இன்னும் கூட நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்!

நான் அவற்றை வேறு எங்கேவாவது அடுக்க முயன்றாலும், தினம் சமைக்கும் உணவு கிண்ணங்களுடன் எப்போதும் சில பொடிகள், ஊறுகாய் நிறைந்த ஜார்கள் நிறைந்திருப்பது உண்மையே. இதுதான் இங்கு ஏறக்குறைய எல்லா தென்னிந்திய வீடுகளிலும் உண்மையில் நடக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

பொடி அல்லது மசாலாப்பொடி தென்னிந்திய காலைஉணவு மற்றும் சாப்பாடு நேரங்களில் ஒரு நல்ல துணையாகவே இருக்கின்றன. பலகாலமாய் உபயோகத்தில் இருக்கும் இவை தென்னிந்திய உணவகங்களிலும் மற்ற சட்னி மற்றும் காலை உணவுகளுடன் சேர்ந்தே பரிமாறப்படுகிறது .சுவையான பொடிகள் பல விதங்களில் தயாரிக்கலாம். எனக்கு என் தாத்தா பொதுவாக நெய் மற்றும் எண்ணெயுடன் சுவைப்பது மட்டுமன்றி பொடியில் தயிர் கலந்து தன் காலை உணவில் உண்பது நன்கு நினைவில் இருக்கிறது.  

ஓரு முழு உணவு தயாரிக்கும் வேளையில் பொடி ஒரு எளிதான மற்றும் சரியான தேர்வு. என்னால் இட்லி தோசைக்கு சட்னி செய்ய மனமில்லாதபோது என்னை காக்க வருவது பொடிகளே. பயணங்களில் பொடி மிகவும் பொருத்தமானதாக இருக்கும், பெற்றோர்கள்/ மாமியார் வீட்டிலிருந்து திரும்பும்போது சிலபொடிகளை பேக் செய்து கொண்டு வருவது என் வழக்கம். பேக் செய்து எடுத்துவர எளிதாக இருப்பதோடு காற்று புகாத, சுத்தமான பாட்டில்களில் சேகரித்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும். 

இப்போது நான் நாவில் நீர் ஊற வைக்கும் சில ஆந்திர சமையல் பொடிகளின் செய்முறையைக் காண்போம்.

கறிவேப்பிலைப்பொடி

கறிவேப்பிலையை சாப்பிட சரியான வழியாக நான் இதை உணர்கிறேன். சாப்பாட்டு வேளையின்போது, நம்மில் பலர் கறிவேப்பிலையை சாம்பாரில் இருந்து எடுத்து தூர வைத்துவிட்டு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம்  அதை ஒரு வாசனைப்பொருளாக கருதுகிறோம். ஆனால்  இதயத்திற்கு, முடிக்கு, நம் தோலிற்கு நல்ல ஆரோக்கியம் தரும் பலன்களை தருவது கறிவேப்பிலை என கூறப்படுகிறது. 

Never miss real stories from India's women.

Register Now

எனவே அதனை நம் உணவின் பகுதியாகக் கொள்வது முக்கியம். இதை பொடியாக செய்து சாப்பிடுவதைவிட சிறந்த முறை எதுவுமில்லை. சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிடவும் தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் இப்பொடி உகந்தது. 

செய்முறை: Sailu’s food blog

வேர்க்கடலை பொடி

ராயல்சீமா பகுதியின் புகழ்பெற்ற பொடி இது . மக்கள் இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் கொடுத்தால் உடனடியாக காலி செய்து விடுவார்கள் என்று சொன்னால்  மிகையில்லை. வேர்க்கடலை சேர்ந்ததால் மிகவும் சுவை தரும் இது வேர்க்கடலை சட்னியைப் போலவே சுவை தரும்.இட்லி தோசையுடன் வழக்கமாக பரிமாறப்படும் இது புரதச்சத்து நிறைந்த ஒன்று என சொல்லவேண்டியது இல்லை. 

செய்முறை: Archana’s Kitchen

ஆளி விதை பொடி

ஃப்ளாக்ஸ் விதை எனப்படும் ஆளிவிதைகள் அதனுடைய அளப்பரிய ஆரோக்கியம் தரும் பலன்களால் மிகவும் புகழ் பெற்றவை. கொழுப்புத்தன்மையற்றது , ஓமேகா 3 மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த நார்ச்சத்து நிறைந்தது. வாசனையற்ற இந்த விதைகள் , சப்பாத்தி மாவு, மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திஸ் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது . 

செய்முறை: Cook With Smile

துவரம்பருப்பு பொடி

கண்டி பொடி வீட்டில் இரவு உணவுக்கு பல நேரங்களில் மிகவும் சிறந்ததாகும். இது ஒரு புரதம் நிறைந்த பலவித பருப்புகளுடன் சேர்ந்த முழுமையான பொடி ஆகும். சமைக்க உங்களுக்கு சோம்பலாக இருந்து  அதே நேரத்தில் பசியும் போகவேண்டுமெனில் இது மிகவும் உதவுகிறது. எனக்கு பிடித்தமானது இந்தப்பொடியை சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து ஆவக்காயுடன் உண்பதே. மாற்றாக இதனை சாதம் ,நெய் மற்றும் சூடான இரசத்துடனும் உண்ணலாம். 

செய்முறை: Akshaya Kumbham

வெள்ளுள்ளிப் பொடி/பூண்டு மசாலாப் பொடி

வெள்ளுள்ளிப் பொடி அல்லது  பூண்டு மசாலாப்பொடி இருப்பதிலேயே நேரடியான மற்றும் குறைந்த பொருட்களுடன் எளிதான செய்முறை கொண்டது. ஆனாலும் சொல்கிறேன் இது நெருப்பைப்போன்ற காரமானது . இந்த பொடியில் ஏராளமான சிவப்புமிளகாய் சேர்ந்திருக்கும். நீங்கள் இது வெறும் மிளகாய்ப்பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுவதைப்போல் உணருவீர்கள் , ஆனாலும் அதன் சுவை மற்றும் மணத்தை அனுபவிக்க நிச்சயம் நீங்கள் இதை முயற்சி செய்ய வேண்டும்.

செய்முறை: Yummy Tummy Aarthi

மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா

Image source: Pexels

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

Sowmya Baruvuri

Loves to click pictures, dance, cook, travel, craft, read and write! read more...

3 Posts | 3,602 Views
All Categories