எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அவளுடைய மருமகள், ஒரு வெளியாள் …

ஒரு மருமகள் ஒருபோதும் மகளுக்கு சமமாக கருதப்படுவதில்லை ... என் உறவினர்கள் என்னை ஒரு வெளியாளைப்போல நடத்தியபோது, ​​இரகசியங்கள் என்னிடமிருந்து மறைக்கப்பட்டன.

ஒரு மருமகள் ஒருபோதும் மகளுக்கு சமமாக கருதப்படுவதில்லை … என் உறவினர்கள் என்னை ஒரு வெளியாளைப்போல நடத்தியபோது, ​​இரகசியங்கள் என்னிடமிருந்து மறைக்கப்பட்டன.

Original in English

நான் என் திருமண வாழ்க்கையின் இரண்டு வருடங்களை என் புகுந்த வீட்டினருடன்  தங்கியிருந்தேன். திருமணத்தின் பொது என் அம்மா என்னிடம் உன்  உன் மாமியாரை உன் அம்மாவை போல் நினை என்று சொன்னாள். ஆனால் நான் என் புகுந்த வீட்டில் நுழைந்த நாள் நிலைமை வேறு என்பதை உணர்ந்தேன். அவள் என் அம்மா அல்ல … அவள் எனக்கு முன்னால் தன் மகளிடம் கூடுதல் அன்பையும் அக்கறையையும் காட்டினாள். ஏன்? அவள் என்ன காட்ட விரும்புகிறாள் என்று எனக்குத் தெரியவில்லை.

பின்னர் என் மைத்துனியின் திருமணம் நிச்சயிக்கப்படும் நேரம் வந்தது. அதனால் அவள் வருங்கால கணவரும் அவனது குடும்பத்தினரும் அவளைப் பார்க்க வருகிறார்கள். தற்செயலாக அந்த நேரத்தில் நான் என் அம்மாவின் இடத்தில் இருந்தேன். அவர்கள் அவளைப் பார்க்க வருகிறார்கள். அந்த நபர்களைப் பற்றி எனக்குத் தெரிவிக்கப்படவில்லை – ஏனென்றால் நான் அதை பற்றி என் பெற்றோரிடம் சொல்லலாம்!

என் என் மாமியார் என்னிடம் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னதால் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் தேதி நிர்ணயிக்கப்படும் வரை, நான் உட்பட யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். கடவுளே, நான் குடும்பத்தின் ஒரு பகுதியாக கருதப்படவில்லை!

அவளுடைய பெற்றோர் அவளுடைய சகோதரனுக்காக ஒரு பெண்ணைத் தேடியபோது என் மைத்துனிக்கும் இது நடந்திருக்குமா? இல்லை! அவள் வீட்டின் மகள், அதனால் அவள் அண்ணி யார் என்று அவள் தெரிந்து கொள்ள வேண்டும் …

நான் ஒரு வெளியாளைப் போல் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. நான் என் மாமியார் அறையில் உட்கார்ந்திருந்த போது, ​​ஷாப்பிங்கிற்காக என் மைத்துனிக்கு கொடுக்க அவள் கொஞ்சம் பணம் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவள் எனக்கு முன்னால் அல்மிராவைத் திறக்கவில்லை, வெளியே செல்லும்படி என்னிடம் கேட்டாள் … நான் அவளுடைய பொருட்களை திருடப் போவது  போல …

என்ன இருந்தாலும் நான் மருமகள்….நான் ஒரு வெளியாள்!

பட ஆதாரம்: கர் கி முர்கி என்ற குறும்படத்திலிருந்து ஒரு ஸ்டில்

About the Author

Sheeba Nair

Hi there, happy to connect. I am a mom, a software engineer, a content writer, a fitness trainer, a yoga practitioner, and an explorer of the best wellness practices of both modern science and our read more...

2 Posts | 2,636 Views
All Categories