Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்களின் அந்தரங்க ஆரோக்கியத்தை பேணும் அவசர கருத்தடை மருந்தான ECP இனி தமிழகத்தின் அனைத்து மருந்தகங்களிலும் தடையின்றி கிடைக்கும்.
ஒரு வழியாக, தமிழ்நாட்டில் இனி பெண்களுக்கான அவசர கருத்தடை மாத்திரைகளை ‘ஓவர் தி கௌன்டர்’ வாங்குவது அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டினை பொறுத்த வரை இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.
Original in English | மொழி பெயர்ப்பு சிந்து பிரியதர்ஷினி
இதன் பொருள், அவசர கருத்தடை மாத்திரைகளை இனி தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சட்டப்பூர்வமாக 18 வயது நிரம்பிய எவராலும் மருத்துவரின் பரிந்துரை, அதாவது டாக்டரின் ‘ப்ரிஸ்க்ரிப்ஷன்’ எனப்படும் மருந்துச் சீட்டின்றி மருந்தங்களில் வாங்க முடியும் என்பது தான்.
உலக சுகாதார மையத்தால், பெண்களின் அந்தரங்க ஆரோக்யத்தை பாதுகாக்கும் முறைகளில் பரிந்துரைக்கப் பட்ட ஒன்று, ‘எமெர்ஜென்சி கான்ட்ராசெப்டிவ் மாத்திரைகள் (ECP)’ எனப்படும் அவசர கருத்தடை மாத்திரைகள்.
இத்தகைய அத்தியாவசியப் பொருளானது, தமிழகத்தில் நீண்ட காலமாகவே வெளிப்படையாக தடை செய்யப்படாத போதும், கிடைக்கப்பெறாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்திய மத்திய சுகாதார மற்றும் நலவாரிய அமைச்சகத்தின் முன்னெடுப்பின் பெயரில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள்(ஃபார்மசிஸ்ட்கள்) போன்ற சுகாதாரப் பணியாளர்களால் ECP களை வழங்க முடியும் என்ற நிலை இருந்த போதிலும், 2005 ஆம் ஆண்டு முதல் எந்த மருந்துக் கடைகளிலும் ECPகள் ஓவர்-தி-கௌன்டர் கிடைக்கப் பெறாத ஒன்றாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான அர்ச்சனா சேகர் மற்றும் சில வழக்கறிஞர்கள் தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு மாநிலத் துறைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக இது தொடர்பாக தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்தனர். இந்த மின்னஞ்சல்கள் மிகத் தெளிவாக மருந்தகங்களில் ECPகள் கிடைக்கப் பெறாத நிலையை சுட்டி காட்டின.
இது குறித்து அறிந்த மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு இயக்குனர் (Director of Drugs Control), உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து மருந்தகங்களிலும் ECPகள் தடையின்றி கிடைக்க வழி செய்யப்பட்டது.
அவசர கருத்தடை மாத்திரைகள் என்பது செக்சுவலி ஆக்ட்டிவ் பெண்கள் பயன்படுத்தக்கூடிய பிறப்பு கட்டுப்பாட்டு வழிகளில் ஒன்றாகும். இவை கர்ப்பத்தைத் தடுக்க உதவுமே தவிர கருக்கலைப்பிற்கான மருந்து அல்ல. இந்த மருந்துகள் கருப்பையில் இருந்து முட்டையை வெளியே தள்ளும் ‘ஓவுலேஷன் (ovulation)’ நிகழ்வை தாமதப்படுத்துபவை. அதாவது பெண் கர்ப்பமாவதை தடுக்க உதவும். மற்றபடி பாலியல் தொற்று நோய்கள் (எ) எஸ்.டி.டி.களிலிருந்து இந்த மருந்துகள் பாதுகாப்பு அளிப்பதில்லை.
இந்தியாவில், பெண்களின் அந்தரங்க ஆரோக்கியம் என்பது வெறும் மருத்துவ பிரச்சனையாக மட்டுமல்லாமல் தார்மீக பிரச்சனையாகவும் உள்ள ஒன்றாகும். ஒரு சமுதாயம் என்ற வகையில், செக்சுவலி ஆக்ட்டிவ் பெண்களை நாம் இன்னும் மோசமானவர்களாகவே பார்க்கிறோம். இந்நிலையில் ECPகளை ஓவர்-தி-கௌன்டர் விற்பது முற்போக்கான மாற்றத்தின் அடையாளமாகும். பாதுகாப்பான ரீப்ரொடக்ட்டிவ் (மகப்பேறு மற்றும் அந்தரங்க) ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
ECPகள் பெண்களுக்கும் அவர்களின் உடல், மன மற்றும் அந்தரங்க ஆரோக்கியத்திற்கும் உரிமைகளுக்கும் அவசியமான ஒன்றாகும். இது பெண்களுக்கு அவர்களது உடல் மேல் அவர்களுக்கு இருக்கும் தனியுரிமையை அளிப்பதோடு அவசர காலங்களில் அவர்களுக்கு உதவுவதாகவும் அமைகிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ECP துணையுடன் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து விடுதலை அடைந்து மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியில் இருந்து ஓரளவேனும் மீள முடியும்.
உரிய முன்னெச்சரிக்கையின்றி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு, ECP அந்தரங்க ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு முற்போக்கான வழியாகும். விரும்பத்தகாத மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை ECPகள் மூலம் தவிர்க்க முடியும்; இதற்கான பெண்ணியவாதிகளின் நீண்ட கால முயற்சி இப்போது இதன் மூலம் வெற்றி கண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பையும் உடல், மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் ஒரு முற்போக்கான நடவடிக்கையான இது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
புகைப்படம்: பெக்செல்ஸ் (Pexels)
Anamika is an English literature student with a strong inclination towards feminist literature, feminist literary criticism and women's history. read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address