சமைக்கவும் சுவைக்கவும்: 9 சுவையான ஹை-ப்ரோடீன் சைவ உணவுகள்!

இந்த உணவுவகைகளை வழக்கமாக உட்கொண்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான அளவு சீரான ப்ரோடீன் சத்து இயல்பாகவே கிடைத்துவிடும்!

இந்த உணவுவகைகளை வழக்கமாக உட்கொண்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான அளவு சீரான ப்ரோடீன் சத்து இயல்பாகவே கிடைத்துவிடும்!

இந்திய சைவ உணவுகளில் பால் மற்றும் பால் சார்ந்த டெய்ரி உணவுப் பொருட்கள் (dairy products) தவிர்த்த பிற சைவ உணவுகளில் குறிப்பிடத்தக்க அளவு மாமிசப்புரதம் (எ) animal proteins இருப்பது இல்லை. ஆனால் மாமிசம் சாராத, புரதம் நிறைந்த சத்தான, சுவையான பல சைவ உணவுகள் இருக்கின்றன. அவற்றை முறையாக, வழக்கமாக உட்கொண்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான அளவு சீரான ப்ரோடீன் சத்து இயல்பாகவே கிடைத்துவிடும்!

பொதுவாக இந்திய உணவுகளில், குறிப்பாக சைவ உணவு வகைகளில், போதுமான அளவு புரதம் கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், இந்திய உணவு வழக்கத்தில் உள்ள பல ‘ஹை-ப்ரோடீன்’ சைவ உணவுகளைப் பற்றி பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை என்பதே உண்மை. எனவே ஹை-ப்ரோடீன் சைவ உணவு சாத்தியமற்றது என்ற இந்த கட்டுக்கதையை முதலில் உடைப்போம்.

வெஜிடேரியன்களின் ப்ரோடீன் தேவைகள் முழுமையாக நிறைவு அடையுமா?

சைவ வகைகளில், ஏதேனும் ஒரு source/மூலக்கூறில் இருந்து மட்டுமே கிடைக்கும் ப்ரோடீன் சத்து போதுமானதாக இருப்பதில்லை.

ஏனெனில் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் ‘animal’ ப்ரோடீன் போலல்லாமல், தனிப்பட்ட ஒரு சைவ உணவு வகையில் மட்டும் இருக்கும் ‘plant’ ப்ரோடீன் மனித உடலுக்கு தேவையான ஒன்பது அமினோ அமிலங்களையும் (amino acids) ஒருசேர உள்ளடக்கி இருப்பதில்லை.

எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை சைவ ப்ரோடீன் உணவுகளை சேர்த்து உண்பதால் மட்டுமே வெஜிடேரியன்கள் முழுமையான ப்ரோடீன் சத்து பெற முடியும்.

இந்தியாவின் ஹை-ப்ரோடீன் சைவ உணவு வகைகள்

இதோ, இங்கே இந்தியாவில் மிகவும் பரவலாக விரும்பி உண்ணப்படும் சில ஹை-ப்ரோடீன் சைவ உணவு வகைகளை செய்முறை வீடியோக்களுடன் பகிர்ந்துள்ளோம். இவை உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதுடன் உங்கள் உணவின் சுவையையும் பலமடங்கு கூட்டிவிடும்.

தஹி பனீர் கபாப் (Dahi Paneer Kebab)

இது பனீர், தயிர், கொண்டைக்கடலை ஆகிய மூன்று ஹை-ப்ரோடீன் சைவ உணவுப் பொருட்களின் ஒருங்கிணைந்த அற்புதக் கலவையாகும். சுவையும் புரதச்சத்தும் நிறைந்த இந்த மொறு-மொறு உணவை அனைவரும் விரும்பி ரசித்து உண்பர்.

Home Cooking Show-வில் ஹேமா சுப்பிரமணியன் வழங்கிய தஹி பனீர் கபாப் செய்முறையை இங்கு பாருங்கள்

சோயா புர்ஜி (Soya Burji)

சோயா ஒரு சிறந்த ஹை-ப்ரோடீன் சைவ உணவாகும். சத்துக்கள் நிறைந்த சோயாவை சுவையுற சமைத்து உண்பதற்கான ஒரு சிறந்த முறை தான் சோயா புர்ஜி.

Easy Indian Recipes-இல் சுசிஸ்மிதா வழங்கிய சோயா புர்ஜி செய்முறையை இங்கு பாருங்கள்.

பருப்பு வடை

பருப்பு வடை, வெகுகாலமாக இந்தியர்களால் விரும்பி உண்ணப்பட்டு வரும் ஒரு உணவு ஆகும். சுவையான இந்த வடைகளை உற்சாகமாக ரசித்து உண்டுகொண்டே உங்கள் ப்ரோடீன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்!

Bhanu’s kitchen-இல் பானு செய்து வழங்கிய குஜராத்தி தால் வடை ரெசிபியை இங்கே பாருங்கள்.

கொண்டைக் கடலை/சுண்டல் கடலை சுக்கா

கொண்டைக் கடலை (எ) சன்னா இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாகும். மங்களூர் பாணி சுண்டல் கடலை சுக்கா என்பது மிகச்சிறந்த சன்னா ரெசிபிகளில் ஒன்றாகும்.

Mural’s kitchen-இல் முரல் ரோட்ரிக்ஸ் செய்து வழங்கிய சன்னா சுக்கா ரெசிபியை இங்கே பாருங்கள்.

பஞ்சரத்ன தால் தட்கா

பருப்பு உணவு வகைகள் இந்தியர்களுக்கான ஹை-ப்ரோடீன் உணவுகளில் முதன்மையானது ஆகும். நாம் அன்றாடம் உண்ணும் பிரதான உணவுகளின் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் தால் உணவு வகையைச் சேர்ந்த இந்த சுவையான ராஜஸ்தானி ஸ்பெஷல் ரெசிபி, கொண்டைக்கடலை, அர்ஹர் பருப்பு (ஒரு வகை துவரை பருப்பு), உளுந்து, மசூர் பருப்பு, மூங் (எ) பாசிப் பருப்பு ஆகிய ஐந்து பருப்பு வகைகளின் கலவையாகும்! உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் இந்த ராஜஸ்தானி தால் கொண்டுள்ளது.

தனது யூடியூப் சேனலில் நிஷா மதுலிகா வழங்கிய பஞ்சரத்ன தால் தட்கா ரெசிபியை இங்கே பாருங்கள்

ராஜ்மா மசாலா

ராஜ்மா மசாலா ஒரு உன்னதமான பாரம்பரியமான பஞ்சாபி உணவாகும். ஒவ்வொரு பஞ்சாபி வீட்டிலும் இன்றியமையாத பண்டமாக இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த அதீத புரத சக்தி மிகுந்த உணவாகும்.

Khana Manpasand-இல் காம்னா சோப்ரா வழங்கிய ராஜ்மா மசாலா ரெசிபியை இங்கே பாருங்கள்.

பாதாம் சூப்

சிறுவயதிலிருந்தே பாதாமின் பயன்கள் பற்றி நாம் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த ஹை-ப்ரோடீன் சூப் சுவை மிகுந்ததாகும்.

Shipra’s kitchen-இல் ஷிப்ரா கண்ணாவுடன் பாதாம் சூப்பை தயாரிப்பது எப்படி என்று இங்கு பாருங்கள்.

சோயா தோசை

அனைவரும் விரும்பும் தோசையை மேலும் சுவையானதாக ஆரோக்கியமானதாக ஆக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சரியான தீர்வு: சோயா தோசை! இந்த ரெசிபி நிச்சயம் உங்கள் நாவில் நீரூறச் செய்யும்!

யூடியூப்பில் தனது சேனலில் ராகினி தும்மா வழங்கிய சோயா தோசை செய்முறை விளக்கத்தை இங்கே பாருங்கள்.

கொள்ளுச் சட்னி

கொள்ளு, ஆயுர்வேதத்தில் சிறப்பாக பரிந்துரைக்கப்படும் பருப்பு வகையாகும். கன்னட மற்றும் தமிழ் வீடுகளில் கொள்ளுச் சட்னி மிகவும் பிரபலம். இந்த காரமான, சுவையான சட்னியை ஆரோக்கியமான தோசை மற்றும் ரொட்டி வகைகளுடன் சேர்த்து உண்டு தேவையான புரதச் சத்தை பெற்று மகிழுங்கள்.

Swayam Paaka-இல் ராஜி சந்திரசேகர் வழங்கிய கொள்ளுச் சட்னி ரெசிபியை இங்கே பாருங்கள்.

Image source: Par Rupeshsukale46 [CC BY-SA 4.0 ], de Wikimedia Commons

About the Author

1 Posts | 1,994 Views
All Categories