Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
எங்களைப் போன்ற படித்த பெண்கள், கிரகணம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு ஏன் இணங்குகிறார்கள்?
மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா | ஆங்கிலத்தில் அசல்
“பார், நீ எதையும் வெட்டவோ அல்லது தைக்கவோ கூடாது!”
“பூட்டு மற்றும் சாவியைக் கூட பயன்படுத்த வேண்டாம்.”
“மிக முக்கியமானது – சமைக்க வேண்டாம்!”
“எதையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது விலக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் செல்வதைப் பொறுத்தவரை, அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது! ”
நான் அதிகமான நபர்களை காண்கையில் இந்நம்பிக்கை என்னை மேலும் குழப்பமடையச் செய்கிறது.
இந்தியாவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, குழந்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால், கிரகணத்தின் போது (சூரிய அல்லது சந்திரனாக இருந்தாலும்) நான் கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருந்தன.
பெரியவர்களின் ஆலோசனையை நான் கவனிக்காமல், வெட்டவோ அல்லது தைக்கவோ சென்றால் என் குழந்தை வடுக்கள் (காயத்தால் ஏற்படும் போன்றவை) தாங்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் தீக்குச்சியை உரசி சமைத்தாலோ அல்லது ஏற்றினாலோ எனக்கு தழும்புகள் ஏற்படும் என எனக்கு எச்சரிக்கப்பட்டது.
ஒரு படித்த நபராக இருப்பதால், வாதிடாமல் இருப்பதே சிறந்தது என்று நான் கருதினாலும், அந்த ‘அறிவு’ என்மீது குவிந்து கிடப்பதை எல்லாம் ஜீரணிப்பது கடினமாக உள்ளது…அதேநேரம் இவையெற்றல்லாம் நம்ப பழக்கப்பட்ட மனங்களிடம் என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க நான் விரும்பவில்லை.
கிரகணத்தின் முழு காலத்திற்கும் நான் தூங்குவது சிறந்தது என்று இன்னொருவர் சுட்டிக்காட்டினார்.
நான் தூங்கினேன்.
வேதவசனங்களைப் பின்பற்றாததன் மூலம் பரிசுத்த ஆவிகளின் கோபத்தை ஏற்படுத்துவேன் என்று நான் பயந்ததால் அல்ல (அவர்கள் அத்தகைய அறிவுறுத்தல்களை ஏதேனும் கொண்டு வருகிறார்களா என்று எனக்கு சந்தேகம் இருந்தது).
ஆனால் நான் என் மாமியாரை நேசிப்பதால், என் குழந்தையின் உடல்நலம் குறித்து அவள் தேவையில்லாமல் கவலைப்பட்டிருப்பதால், இதற்கெல்லாம் நான் செவி கொடுத்தேன்.
நான் பின்னர் இணையத்தில் தேடியபோது, கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரே மதம் இந்து மதம் அல்ல என்பதைக் கண்டுபிடித்தேன். இஸ்லாமிய புனித புத்தகங்களில் கிரகணங்கள் உன்மையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தையும் அல்லது அவளுடைய பிறக்காத குழந்தையையும் பாதிக்கக்கூடும் என்று பரிந்துரைக்கும் எதுவும் இல்லை என்றாலும், இந்த நம்பிக்கைகளுக்கு இஸ்லாமியர்களும் விதிவிலக்கு இல்லை.
நான் மிகவும் நேசிக்கும் என் மாமியார் தேவையில்லாமல் வருத்தப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால், நான் வீட்டிற்குள்ளேயே தங்கி ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன் என்றேன்.
வாசிப்பு என் குழந்தையின் கண்களுக்கு நன்றாக இருக்குமா என, அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
“நான் என்ன பெரிதாக கேட்டுவிட்டேன், அந்த மூன்று மணிநேரங்களுக்கு நீ நிம்மதியாக தூங்கக்கூடாதா?” என்பது அவர்களின் கேள்வி.
நான் தலையசைத்தேன், சிரித்தேன், அவளுடைய விருப்பங்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன்.
“சரி, நீ நேராக படுத்துத் தூங்கு!”
விவாதத்திற்கு ஆர்வம் இல்லாத நான் ஆமோதித்தேன்.
இந்த நம்பிக்கைகளை நான் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் எண்ணம் இல்லாவிட்டாலும் மூத்தவர்களிடம் செவிசாய்த்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றும் பலர் உங்களிடையே உள்ளனர் என்று நான் நம்புகிறேன்; சிலர் எதிர்வு தெரிவித்தால் பெரியவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்ற பயத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறார்கள்.
என்னைப் போன்ற சிலர், ஆட்சேபனை செய்வதைப் பொருட்படுத்த மாட்டார்கள், அன்பு மற்றும் மரியாதை காரணமாக பிரச்சினையை பெரிதுபடுத்தமாட்டார்கள்.
வெளியில் செல்லாததன் பின்னால் உள்ள தர்க்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கிரகணங்களின் போது சூரியனும் சந்திரனும் கொடுக்கும் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சும், பார்வையை பாதிக்கும்.
பள்ளியில் புவியியல் மற்றும் அறிவியல் படித்தீர்கள். இந்த உடல்கள், சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒருவருக்கொருவர் பாதையை கடக்கும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடவுளின் பொருட்டு, இந்த இயக்கங்கள் ஏதேனும் கருவின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நீங்கள் ஜீரணிக்க முடியுமா?
நீங்கள் அந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டால் அது பள்ளியில் நமக்கு வழங்கப்பட்ட உரைகள் பயனற்ற போனதன் மற்றொரு அடையாளம். நமது கல்வி முறையின் மற்றொரு தோல்வி.
மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அதே வழியில் பயணிக்க வேண்டாம்.
நமக்கு முன்பே எல்லோரும் அவர்களிடம் ‘சொல்லப்பட்ட’ அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தால், இந்திரா காந்தி, ஹிலாரி கிளிண்டன் மற்றும் மிக சமீபத்தில் ஏஞ்சலா மேர்க்கெல் போன்ற புத்திசாலித்தனமான பெண்களை நாம் மாநிலத் தலைவர்களாகக் கொண்டிருக்க மாட்டோம். பெண்கள் ஒருபோதும் எந்தவொரு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றிருக்க மாட்டார்கள். நீங்கள் வேலை செய்யும் பெண்களைக் கூட பார்க்க மாட்டீர்கள்.
நீங்கள் ஒரு கிளர்ச்சிக்காரர் என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், பதினேழாம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிக்காததன் மூலமும், அவற்றை மேலும் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதன் மூலமும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்.
வீட்டு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று நம்மில் பலர் தேர்வு செய்கிறோம். ஆனால் தேவைப்படும் இடத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்.
உங்களுக்குத் தெரியாத தந்திரத்தை எதிர்த்துப் போராட உங்களுக்கு தைரியம் இல்லையென்றால், நீங்கள் அதை அடுத்தவருக்கு கொண்டுசெல்லவில்லை என்பதையாவது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் எப்போதும் மிகச்சிறந்த கிளர்ச்சியாளராக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிக்காமல் இருப்பதே போதுமான பங்களிப்பாக இருக்கும்!
Photo by Sara Rolin on Unsplash
Freelance writer, eBook author and blogger. read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address