நான் முன்பு பலமுறை என் மரியாதையை இழந்திருக்கிறேன், இன்று நான் மீண்டும் என் மரியாதையை இழந்தால் என்ன ஆகப்போகிறது?

பெண்களின் உடல் மற்றும் உயிர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ‘கவுரவத்தை’ நிலைநிறுத்தும் ஒரு உருவமாக பார்க்கப்படுகிறார்கள். தங்கள் கனவுகளின் தியாகத்தின் மூலமும், சில சமயங்களில் அவர்களின் உயிரை கூட தியாகம் செய்து கவுரவத்தை நிலைநிறுத்த தள்ளப்படுகிறார்கள்.

பெண்களின் உடல் மற்றும் உயிர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ‘கவுரவத்தை’ நிலைநிறுத்தும் ஒரு உருவமாக பார்க்கப்படுகிறார்கள். தங்கள் கனவுகளின் தியாகத்தின் மூலமும், சில சமயங்களில் அவர்களின் உயிரை கூட தியாகம் செய்து கவுரவத்தை நிலைநிறுத்த தள்ளப்படுகிறார்கள்.

Original in English

நான் வெகுநாட்களுக்கு முன்பு என் மரியாதையை இழந்தேன்
நெரிசலான வரிசையில் அம்மாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தேன்
முதன்முறையாக என்னைத் தொட்டபோது
பின்னர், அதே நல்ல மனிதன் எனக்கு ஒரு குச்சிமிட்டாயை கொடுத்தார்.

நான் இரண்டாவது முறையாக எனது மரியாதையை இழந்தேன்
நான் வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அறையப்பட்டேன்
என் சகோதரன் முன்னால். அவன் என்னைவிட வயதில் இளையவன்
இரவில் வெளியே செல்ல தயாராகிக்கொண்டிருந்தான்.

நான் மூன்றாவது முறையாக எனது மரியாதையை இழந்தேன்
அவர்கள் என் அம்மாவை வீட்டை விட்டு வெளியேற்றியபோது
அவர்கள் சொத்தில் மகள்களுக்கு பங்குகள் கிடையாது என்றபோது
நான் என் பயம் நிறைந்த கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தேன்!

நான் எண்ணற்ற முறைகளாக என் மரியாதையை இழந்தேன்
என் மாமியார் அறைநிறைய விருந்தினர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியபோது
அனைவரையும் பொறுத்தவரை
நான் அவரது மகனுக்கு ஏற்ற அழகிய மணமகள் அல்ல

இன்று நான் மீண்டும் எனது கவரவத்தை இழந்தால் என்ன நேரிடும்
நீங்கள் என்னை நெருங்கும்போதும் உங்கள் உதடுகள் என் உதடுகளை அணைக்கும்போதும்
என் உலகம் மறைந்துவிடுகிறது
ஒவ்வொரு முறையும் என் கண்கள் உங்கள் கண்களை சந்திக்கையில் ஒரு அந்நியருடன் பேசுவதாக உணர்கிறது

இன்று மீண்டும் என் கவரவத்தை இழந்தால் என்ன நேரிடும்
நடக்கக் கூடாத பாதையை நான் நடப்பதால்
என் முகமூடிகளை இழப்பதால்
எனக்கு நான்தான் ஒரு நல்ல துணை

பட ஆதாரம்: யூடியூப்பில் இருந்து இந்தி நாடகம் அனாமிகாவிலிருந்து ஒரு ஸ்டில்

About the Author

Tanushree Ghosh

Tanushree Ghosh (Ph. D., Chemistry, Cornell, NY), is Director at Intel Corp., a social activist, and an author. She is a contributor (past and present) to several popular e-zines incl. The Huffington Post US ( read more...

1 Posts | 911 Views
All Categories