நீலவானம்…ம்மா.. ம்மா.. இந்த வாதம் ஏன் மா இவ்வாதோ பெதுசா இருக்கு?

திருமணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் நமக்கு குழந்தை இல்லாமல் எவ்வளோ ஹாஸ்பிடல் கோவில் என்று ஏறி ஏறி இறங்கினோம்...

திருமணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் நமக்கு குழந்தை இல்லாமல் எவ்வளோ ஹாஸ்பிடல் கோவில் என்று ஏறி ஏறி இறங்கினோம்…

நீ…ல வானம்!
நீ…யும் நானும்!
கண்களே பாஷையாய்…
கைகளே ஆசையாய்…
வையமே கோயிலாய்…
வானமே வாயிலாய்…
பாம்பு நீ பாயிலே…
சாய்ந்து நாம் கூடுவோம்…
இனி நீயென்று நானென்று
இருவேறு ஆளில்லையே!

என்ற பாடல் அழகாய் மதிய வேலையும் அல்லாது மாலை பொழுதும் அல்லாது 3 மணிக்கு கேட்ட படியே கிழக்கு கடற்கரை சாலையில் மிதமான வேகத்தில் காரை ஒட்டி கொண்டு இருந்தான் ராஜன்.

அவன் பக்கத்தில் அவனின் மனைவி சிந்து மற்றும் அவளின் மடியில் அவர்கள் அன்பு மகள் ரோஜா அமர்ந்த படி வெளியில் நீலவானத்தை பார்த்து கொண்டே வந்தாள்.

ம்மா.. ம்மா.. இந்த வாதம் ஏன் மா இவ்வாதோ பெதுசா இருக்கு. என்று அவளின் மழைலை மொழியில் கேட்டாள்…

சிந்து சிரித்து கொண்டே வானம் எல்லாம் கடவுள் படைச்சதுல குட்டி அதான் பெருசா இருக்கு.

செதி அப்போ ஏன் அது நீத கதர்ல இக்கு..
ஹாஹா… என் செல்லமே…
கடவுள் படைச்ச எல்லாமே கலர் புல்லா தான் இருக்கும் குட்டி.
அப்பதியா… ஹ்ம்ம், ஆமாம் டி செல்லம்..
ப்பா… ப்பா… காதை நித்து… காதை நித்து…
என்ன குட்டி… என்ன ஆச்சு?
காதை நித்து… நா சொல்தென்!

ராஜன் காரை ஓரமாய் நிறுத்தி விட்டு, காரை விட்டு கிழே இறங்கி… ஹ்ம்ம் சொல்லு ரோஜா குட்டி ஏன் காரை நிறுத்த சொன்னிங்க?

ப்பா… அங்க பாது அய்து கீம் வாங்கி குது!
ஐஸ் கிரீம் வேணுமா என் ரோஜா குட்டிக்கு, வாங்க வாங்கி தரேன் செல்லம் என்று அவன் தூக்கி கொள்ள…
ஐய்…த்த்தாலி…த்த்தாலி…உம்மா ப்பா…என்று ஆசையோடு முத்தத்தை குடுத்தால் அந்த பிஞ்சு மழலை.
அவளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து விட்டு பக்கத்தில் இருக்கும் பீச்க்கு சென்றனர்.

ரோஜா குட்டி ஐஸ் க்ரீமை சிந்தி சிந்தி அழகாய் சாப்பிட்டு கொண்டு, ஐய் ஐய் பீச்சுசு பீச்சுசு…என்று துள்ளி குதித்தாள்.

அவளை இறக்கி விட்டு, ராஜனும் சிந்துவும் மணல் மேல் அமர்ந்தனர். ரோஜா ஐஸ் க்ரீமை சாப்பிட்டு முடித்து விட்டு மணலில் வீடு கட்டி விளையாடி கொண்டு இருந்தாள்.

ராஜ், ரோஜா வந்து இந்த நாலு வருஷம் நம்ம வாழ்கையே மாறிடுச்சு ல.. தொலைந்த நம்ம சந்தோஷம் திரும்பி வந்த மாறி இருக்குல. அவளுடைய மழலை பேச்சு அவளுடைய குறும்பு தனம் இந்த பிஞ்சு தளிர்லயே அவளுடைய அன்பு அவளுடைய பூ போல சிரிப்பு எவ்வளவு அழகு ல…

ஆமாம் சிந்து அவள் வந்து தான் நம்ம வாழ்க்கையில் வசந்தமே. திருமணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் நமக்கு குழந்தை இல்லாமல் எவ்வளோ ஹாஸ்பிடல் கோவில் என்று ஏறி ஏறி இறங்கினோம்…

ஆனாலும் நமக்கு குழந்தை வரமே இல்லாம தவிக்கும் போது தான் இவளை அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்தோம் – இந்த அழகான குழந்தையை குப்பை தொட்டியில் போட யாருக்கு மனம் வந்தது தெரியல சிந்து…

எப்பவும் உடனே கிடைக்கிறவங்களுக்கு அதோட அருமை தெரியாதுங்க.
கிடைக்காதவங்களுக்கு  தான் அதோட வலி ஏக்கம் எல்லாம் தெரியும்.

ரோஜா ஒடி வந்து ப்பா… ம்மா… நா வீது கத்திதேன் அதோ… என்று அவள் மழலை மொழியில் கொஞ்சி கொஞ்சி சொல்ல…
அம்மா… வாதம் நீதமா தான இதுஞ்சு இப்ப பாதேன் கதுப்பா மாதிச்சு…ஐய் ஐய் என்று துள்ளி குதித்தாள் மான் குட்டி போல் ரோஜா குட்டி.

நீலவானமும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் மழலை மொழியில் தன்னை மறைந்து கொண்டு இரவு தேவதைக்கு வழி கொடுத்தது…

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளாதவர்.”

Image Source: Pixabay

முதல் வெளியீடு

About the Author

1 Posts | 1,094 Views
All Categories