விழித்தெழு! பெண்களின் உரிமை காத்திடு!

ஒரு பெண் தனக்கான தடைகளை மீறி எழுந்து நிற்கும் போது, தனக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளுக்காக நிற்கிறாள் என்று உணர்வோம்!

ஒவ்வொரு முறை ஒரு பெண் தனக்கான தடைகளை மீறி எழுந்து நிற்கும் போதும், அவள் தனக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்காக, பெண்களின் உரிமைகளுக்காக நிற்கிறாள் என்று உணர்வோம்!

உயிர் எழுத்தே முதலெழுத்தாய் கோர்த்து பெண்ணை ‘ஓயாது உரிமை கேள்’ என்று எழுதுகிறார், நம் வாசகி கார்த்திகா.

வள்தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிவ௫முன்பே 
ற்றலோடு போராட வேண்டியவள் பெண் என்று அறிந்தவள்!
ன்றியமையாதது அவளின் அன்புக் கொடை
டு செய்ய முடியாதவள்; ஆனால் அவளுக்கு ஏன் அடிமை நிலை?
ரிமையோடு உரக்கச் சொல்வேன் உனக்கு,பெண்ணே!
க்கத்தோடும் லட்சியத்தோடும்
ட்டாத உயரம் தொட போராடு!
றுகின்ற மலை போல் உயரம் செல் பெண்ணே!!
யம் ஏதும் இன்றி உன் வாழ்வின்
வ்வொரு திசையிலும் விழிப்போடு முன்னேறிச் செல்!
யாமல் நம்பிக்கை கொள் ஓயாமல் உனது உரிமை கேள்!
ஓளவையின் வயதைக் கடந்தாலும் சலியாமல் நில் – அவர்போன்று
‘அதளவு தானே’ என்று எதையும் தாண்டி தலைநிமிர்ந்து வாழ்.

துணிந்து நில் – உன்னை அடிமையாக்குபவரை எதிர்கொள்
பெண்களும் ஆண்களும் சமம் என்று சொல்.
நானும் ஒ௫ பெண் என்பதில் பெருமை கொண்டு
விழித்தெழு பெண்ணே!
நம் நாட்டின் பெண்களுக்காக உரிமையை காத்திடு பெண்ணே

என் உள்ளம் ஊற்றி
உயிரெழுத்துகளில் உனக்கு எழுதி சமர்ப்பிக்கிறேன்
எழுந்து வா பெண்ணே
இனி ஒரு விதி நாம் செய்வோம்!

பட ஆதாரம்: Pexels.com

About the Author

1 Posts | 1,577 Views
All Categories