பெண் உரிமைகளுக்காக போராடிய 12 பிரபலமான இந்திய பெண்ணியவாதிகள்

சில பெண்கள் தங்கள் இடைவிடாத முயற்சியினால் சாதாரண இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அத்தகைய மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த 12 புகழ் வாய்ந்த பெண்ணியவாதிகளைப்பற்றி இன்று பார்ப்போம்.

சில பெண்கள் தங்கள் இடைவிடாத முயற்சியினால் சாதாரண இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.  அத்தகைய மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த 12 புகழ் வாய்ந்த பெண்ணியவாதிகளைப்பற்றி இன்று பார்ப்போம்.

மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா

பெண்கள் அதிக சிரமங்களையும், தொல்லைகளையும் எதிர் கொள்ளவேண்டிய இன்றைய உலகில், புகழ்வாய்ந்த பெண்ணியவாதிகள் நின்று தங்கள் குரலைப் பதிவு செய்ய வேண்டியது முக்கியமாகிறது. அதிலும் அப்படி எழுந்து குரல் தரும் பெண்ணியவாதிகளுக்கு நம்முடைய ஆதரவும், உற்சாகப்படுத்துதலும் இன்றியமையாததாகிறது.

யார் அந்த புகழ் வாய்ந்த பெண்ணியவாதிகள்?

அவர்கள் நமக்காக செய்துள்ள பங்களிப்பு என்ன?

கமலா பசின்

சமூக அறிவியலாளரும், பெண்ணியவாதியுமான கமலா பசின் கல்வி, முன்னேற்றம், ஊடகங்கள் மற்றும் பாலின பிரச்சனைகள் சார்ந்த செயல்பாட்டில் தன்னை கடந்த 35 வருடங்களாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். 1972 இல், கிராம மற்றும் நகர வாழ் ஏழைகளுக்கான தன் மேம்பாடு அடையும் திட்டத்துடன் ஆரம்பித்தார் இவர். பின்பு உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பசியிலிருந்து  அவர்களை விடுவித்தலுக்கான முனைப்பியக்கம் ஒன்றை நடத்தினார். இதற்காக அமைப்பு சாரா நிறுவனங்களை ஆதரித்து அவர்கள் மூலம் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான பயில்கூடங்களையும் பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

சங்கத் எனப்படும் தெற்கு ஆசியாவின் பெண்ணியவாதிகளின் கட்டமைப்பின் ஆலோசகராக தற்சமயம் அங்கம் வகிக்கும் இவர், ஜாகோரி எனும் பெண்களுக்கான வளம் மற்றும் பயிற்சி மையத்தில் இன்றும் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார். 

மேலும் அவர் ஆண் பெண் பாலின மற்றும் நிலையான முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பயில்கூடங்களும் நடத்தி வருகிறார்.

துர்காபாய் தேஷ்முக்

விடுதலைப் போராளியும், சமூக செயற்பாட்டாளரும் ஆன துர்க்காபாய்  ஒரு சமூக சேவகரும், சட்டம் பயின்ற அரசியல்வாதியும் ஆவார்.

பொது மக்கள் செயல்பாட்டில் பெண் விடுதலைக்காக அவர் ஆந்திர மகிளா சபையை 1937 ஆம் ஆண்டு நிறுவினார். இதனுடன் இந்தியாவின் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக மேலும் இந்திய திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சட்டசபையின் தலைவராக ஒரே பெண் குழு உறுப்பினர் இவரே.  12 ஆவது வயதிலேயே ஆங்கில திணிப்பை எதிர்த்து பள்ளி செல்வதை நிறுத்தினார். 

ஒரு சத்தியாகிரகி ஆன இவர் பெண்கள் சார்பான சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தினார். 1958 தேசிய பெண் கல்வி சபைக்கான  தலைவரானபின் பெண்கல்வி சார்ந்த பல பிரச்சனைகளை முன்னெடுத்து சரி செய்ததில் இவரின் பங்கு போற்றத்தக்கது.

அம்ரிதா பிரிதம்

கவிதாயினி, எழுத்தாளர் மற்றும் புகழ் வாய்ந்த பெண்ணியவாதியான இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த மக்களை நடத்தும் விதத்தை ஏற்க மறுத்தார். இவர் கதை, கவிதை, கட்டுரை என 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். 

பிஞ்சர் (1950) எனும் இவரது  புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான- புரோ போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. அவரின் கடினமான வாழ்க்கை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான குரல் ஆகியவை இவரது புத்தகங்களில் பேசப்படும். இவரது பிஞ்சர் கதையை தழுவி எடுக்கப்பட்ட்ட திரைப்படம் 2003 இல் வெளியாகி தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுக்கு தேர்வானது.

பஞ்சாபில், 1950 இன் பெண்களின் மிக முக்கிய குரலாக குறிப்பிடப்படுகிறார். சுனெஹேட் காக சாகித்திய அகாடமி, இந்தியாவில் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது காகஸ் தெ கான்வாஸ் எனும் இவரது படைப்புக்காக 1982 இல் கிடைத்தது.

இவர் தன் நண்பர், கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஒம்ரோஸுடன் 45 ஆண்டுகாலம் திருமணமில்லாமல் இணைந்து வாழ்ந்து சமூக வரையறைகளுக்கு எதிராக போராடினார்.

கவிதை எழுத்து பெண்ணியம்தாண்டி 1986 இன் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார்.

ஊர்வசி பூதாலியா

அடுத்து நாம் காணும் பெண்ணியவாதி எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தார்- ஊர்வசி பூதாலியா.

ஊர்வசி பூதாலியாலியா, ரிது மேனன் அவர்களுடன்  காளி எனும் முதன் முதலாக பெண்ணிய பதிப்பகம் ஒன்றை 1984 ஆம் ஆண்டில் நிறுவினார். இது இந்தியாவில் உள்ள பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் ஆரம்பித்த ஒரு தளமாகும்,  அதன்பின் 2003 இல் பூதாலியா தன் கதைகள், பொது தலைப்புகள், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் பெண்ணிய இலக்கியங்கள் ஆகியவற்றை ஸுபான் புத்தகங்களில் (Zubaan books) வெளியிட்டார்.

பாலின பிரச்சனைகள், ஊடகங்கள், வகுப்புவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஆகிய தளங்களில் தன் எழுத்துகளில் முத்திரை பதித்தார். இவருடையஎழுத்து பல செய்தித்தாள்களிலும் , டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே மற்றும் அவுட்லுக் பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன. அதுமட்டுமன்றி 7 புத்தகங்களில் இணை எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.

தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்: வாய்சஸ் ஃப்ரம் தி பார்டிஷன் ஆஃப் இந்தியா என அவர் எழுதிய புத்தகத்தில் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைகளில் பிழைத்தவர்கள் பலரை பற்றியும் டைரி, கடிதம் மற்றும் கட்டுரைகள் போன்ற  வரலாற்று ஆவணங்கள் பற்றியும் எழுதியுள்ளார். அப்புத்தகம் முக்கியமாக பிரிவினையின்போது பெண்களால் எதிர்கொள்ளப்பட்ட வன்முறைகளைப்பற்றி பேசுகிறது.  

உமா நாராயண்

பெண்ணிய அறிஞரான உமா நாராயண் வாசார் கல்லூரியில் தத்துவ பேராசிரியை. இவர் டிஸ்லொகெடிங் கல்ச்சர்ஸ் – ஐடெண்டிட்டிஸ் டிரெடிஷன்ஸ் அண்ட் தேர்ட் வர்ல்ட் ஃபெமினிஸம் எனும் புத்தக ஆசிரியர். பெண்ணியம் என்பது இயற்கையில் ஒரு மேற்கத்தியம் மட்டுமே சார்ந்த்தல்ல,எனும் ஆசிரியர் அதை ஒரு கருத்தியலாக பார்க்கிறார். இவரது நூல் ஒட்டுமொத்த மேற்கத்திமே ஒரு மறு பரிசீலனைக்கு உரியது என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது.  

ரிகன்ஸ்ட்ரக்டிங் பொலிடிகல் தியரி: ஃபெமினிஸ்ட் பர்ஸ்பெக்டிவ்ஸ்  எனும் நூலை மேரி என் ஸ்டான்லி என்பவருடன் இணைந்தும் சாண்ட்ரா ஹார்டிங்குடன் சேர்ந்து பிலாசஃபி ஃபார் எ மல்டிகல்சுரல், போஸ்ட் கலோனியல் அண்ட் ஃபெமினிஸ்ட் வர்ல்ட் எனும் நூலையும் வெளியுட்டுள்ளார்.

சம்பத் பால் தேவி

சம்பத் பால் தேவி, உத்தரபிரதேசத்தில் பண்டெல்கந்த் மண்டலத்தில்   பிறந்தவர். ஆணாதிக்க சமுதாயத்தினை கண்கூடாக கண்டவர். கணவரால் கருணையின்றி அடிக்கப்படும் பெண்கள், சம்பத் பால் தேவியின் தலையீடு பயனற்று போனது அதுமட்டுமன்றி அவரையும் அந்தப் பெண்ணின் கணவர் அடித்தார். அடுத்தநாள், அதே இடத்திற்கு மேலும் நான்கு பெண்களுடனும் மூங்கில் கொம்புகளுடனும் சென்று அந்த மனிதரை அடித்தார்.

ஒரு சமூக தன்னார்வலர் மற்றும் அனைவரும் அறிந்த சமூக அமைப்பின் நிறுவனர். அந்த பகுதியில் ஆண்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் அவரை தேடி வர ஆரம்பித்தனர்.  2006 இல் இந்நிறுவனம் முழுமையாக இயக்கமாக மாறியது , இயக்கத்திற்கு ஒரு பெயர் மற்றும் சீருடை வேண்டுமென்பதை உணர்ந்தார். இப்படி உருவானதே குலாபி கேங், சிவப்பு சீருடைகள் அணிந்த பெண்களின் அணி. குரலற்றவர்களின் குரலாக பெண்களுக்கான அதிகார மையமாகவும் உருவெடுத்தது குலாபி கேங்.

ரூத் வனிதா

ரூத் வனிதா, ஒரு இந்திய கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

பிரிட்டீஷ் மற்றும் இந்திய வரலாறு – இவற்றில் சிறப்பு ஈடுபாடு கொண்ட இவர் பாலின வேறுபாடு,பாலியல் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தினார்.  

1978 இல் மனுஷி, பெண்கள் மற்றும் இந்திய சமூக இதழ் ஒன்றின் மது கிஷ்வருடன் இணைந்து நிறுவினார். மனுஷி எனும் பிரசுரம் இந்தியாவின் பெண்கள் பற்றியது , பெண்களின் வேலைகள், புதினங்கள் மற்றும் பெண்ணியம், பாலின பிரச்சனைகள் சாராத சிறுகதைகள் ஆகியவற்றை வெளியிடுகிறது.

டேன்சிங் வித் நேஷன் எனும் தலைப்பில் ஒரு நூலை எழுதிய இவர் அப்புத்தகம் விலைமாதர்களின் மும்பை சினிமா வரையான பயணம் பற்றி பேசுகிறது.

கவிதா கிருஷ்ணன்

கவிதா கிருஷ்ணன், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் செயாலாளர் ஆவார். இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமை செயலர் ஆகவும் இருக்கும் இவர் லிபரேஷன் எனும் மாத இதழின் எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ்நாடு, குன்னூரைச் சேர்ந்த இவர் ஒரு பெண்ணுரிமை ஆர்வலர் ஆவார் 2012 ஆம் ஆண்டுக்கு பின், டெல்லியில் ஒரு கும்பலால் குழு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா வழக்கில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகித்தவர். அப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த இவரது பேச்சு பிரபலமடைந்தது மட்டுமின்றி பலரை இவ்வன்முறைகளுக்கு எதிராக பேச ஒரு தூண்டுகோலாகவும் அமைந்தது.

மரண தண்டனை, பாலியல் பலாத்காரம் குறித்த இவரது பார்வைகள் இளைய சமுதாயத்தில் ஆழமான விளைவையும், உத்வேகத்தையும் அளித்தது. மரண தண்டனை மற்றும் இரசாயன வார்ப்பு ஆகியவை இக்குற்றங்களுக்கான சரியான தடுப்பு முறைகள் இல்லை என்பது இவரது பார்வையாகும்.

இரோம் ஷர்மிளா

இரும்பு பெண்மணி என அனைவராலும் அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா மணிப்பூரைச் சேர்ந்தவர். சமத்துவ உரிமை ஆர்வலர், பெண்ணியவாதி மற்றும் கவிஞர் ஆவார். உலகின் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் என்ற சாதனையும் இவருக்கு உரியது. நவம்பர் 5 , 2000 இலிருந்து ஆகஸ்ட் 9, 2016 வரையிலான 16  வருடங்கள் இவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இவர் உண்ணாவிரதம் மேற்கொள்ள காரணம் மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கு காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 ஐ திரும்பப்பெற வேண்டும் என்பதாகும்  மலோம் படுகொலை என தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும் படுகொலை நவம்பர் 2, 2000 அன்று இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் எனும் சிற்றூரில்  இந்தியப்படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்த சம்பவம் ஆகும்.          

மனித உரிமைகளுக்கான குவான்ங்ஜு பரிசையும், வாழ்நாள் சாதனையாளர் எனும் ஆசிய மனித உரிமை கமிஷன் விருதையும் இரோம் ஷர்மிளா பெற்றுள்ளார்.

மேதா பட்கர்

மேதா பட்கர் ஒரு சமூக சேவகர், ஒரு சமூக ஆர்வலரும் மனித உரிமைகளுக்குமான வழக்குரைஞரும் ஆவார். அரசியல்,மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் பலவற்றில் பழங்குடியினர், தலித், விவசாயிகள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் அநீதிகளுக்கு எதிராக மேதாபட்கர் போராடி வந்துள்ளார்.  

நர்மதா பசாவ் ஆந்தோலன் (NBA) என்ற அமைப்பை மத்தியப்பிரதேசம்,மகராஷ்டிரா மற்றும் குஜராத்தில்  நிறுவிய இவர் இதனுடன்      பெண் உரிமைகளுக்காக போராடும் சக்திவாய்ந்த வழக்குரைஞர் ஆகவும் விளங்கி பல பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு காரணியாகவும் விளங்குகிறார்.

மானசி பிரதான்

மானசி பிரதான் இந்திய பெண் உரிமை செயல்பாட்டாளரான இவர் ஹானர் ஃபார் வுமன் நேஷனல் காம்பெயின் எனும் அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு நாடு முழுவதுமான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அவருடைய முயற்சிகளினால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 21 ஆம் நூற்றாண்டின் உலக பெண்ணிய இயக்கங்களின் முன்னோடியாக மானசி பிரதான் கருதப்படுகிறார்.

1987 இல் அவரால் நிறுவப்பட்ட OYSS இயக்கம் பெண்கல்வியின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துவதுடன் மாணவிகள் தலைவர்களாக உருவாவதற்கான பயிற்சியையும் தருகிறது. மேலும் பல பயிற்சி முகாம்களையும் தற்காப்பு மற்றும் தலைமைப்பண்புக்கான பயில்கூடங்களையும் நடத்தி வருகிறது. 

இவற்றுடன் நிர்பயா வாஹினி மற்றும் நிர்பயா சமரோ போன்ற அமைப்புகளையும் இவர் நடத்தி வருகிறார்.

எல்சா டி சில்வா

நாம் இறுதியாக பார்க்க இருக்கும் பெண்ணியவாதி எல்சா டி சில்வா.

இவர் சேஃப்சிட்டி (SafeCity) நிறுவனர் மற்றும் புகழ் வாய்ந்த பெண்ணியவாதி ஆவார். இந்நிறுவனம் அதிக மக்களைக் கொண்ட ஒரு குழுவின் மூலம் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் வாயிலாக நகரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  உதவுகிறது. இதன் நோக்கம், பொது இடங்களில் நடக்கும் சில சம்பவங்களின் அறிக்கை மற்றும் தகவல்களை சேகரிப்பதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியைப்பற்றி பயனாளிகள் தகவல்கள் பெற முடிவதுடன் அந்த பகுதி பாதுகாப்பானதா இல்லையா என அறியவும் முடிகிறது. உள்ளூர் நிர்வாகமும் இதன் மூலம் அப்பகுதியின் பிரச்சனைகளை அறிய முடிவதுடன் அப்பகுதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முடிகிறது.f .

எல்சா, முன்னாள் விமான போக்குவரத்து தொழில் சார்ந்தவர், விமான போக்குவரத்து கட்டமைப்பு திட்டமிடலில் கிங் பிஷர் நிறுவன துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர் . அவருடைய கம்பெனி திவால் ஆனதும் ரெட் டாட் ஃபவுண்டேஷன் ஒன்றை நிறுவினார். இந்த அமைப்பின் சமூகம் சார்ந்த திட்டமே சேஃப் சிட்டி ஆகும்.RDF  இன் முக்கிய நோக்கம் பாலின சமத்துவம், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக போராடுதல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியன ஆகும் . இந்த நிறுவனம் தற்போது மும்பை மற்றும் டெல்லியில் உள்ளது.

About the Author

Apoorva Menon

A tall, curly haired and awkward girl who has a strong inside voice. Love dogs, food and absolutely anything that can keep me stimulated. A pretty chill person, usually. I'm better at written words read more...

1 Posts | 5,922 Views
All Categories