போலீசில் எவ்வாறு புகார் செய்ய வேண்டுமா? ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted: June 19, 2019

பெரும்பாலான பெண்கள் போலீசில் புகார் செய்யும் போது கொஞ்சம் பயத்துடன் பதற்றமாக இருப்பார்கள். அவ்வாறு புகார் செய்ய தேவை எழுந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கம் இங்கே.

நீங்கள் போலீசில் ஒரு புகாரை செய்ய வேண்டிய சூழ்நிலையில் எப்போதாவது இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் யாவை?
சாதாரண குற்றங்கள் (எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் போதும்) மற்றும் கிரிமினல் குற்றங்கள் (நீதிமன்றம் வழி நடத்த வேண்டும்) இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

(You can also access this article in English: How to make a police complaint, things a woman should know).

என்ன நடந்தது என்பது பற்றிய துல்லியமான விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
போலீசில் புகார்கள் சட்டப்பூர்வமாக பல வழிகளில் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் கூட புகார்கள் செய்யமுடிந்தாலும் நேரடியாக செய்யப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஒரு குற்றம் நடந்ததும் புகாரினை பதிவு செய்வது நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருந்தாலும், இது சட்டபூர்வமாக கட்டாயமில்லை.

போலீசில் எவ்வாறு புகாரை தாக்கல் செய்யலாம் என்பதைப்பற்றியும் மேலும் ஒரு பெண்ணாக உங்கள் உரிமைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திரு. முகர்ஜி, இக்காலத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம், சட்டம் மற்றும் அவர்களின் சட்ட உரிமைகள் பற்றித் தெளிவாக தெரிந்து கொள்வதுதான். அவர்கள் முதலாவதாக தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களது வீட்டின் அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் பெயரையும், அது இருக்கும் இடம் பற்றியும் தான்.

“நாம் இங்கு பாதுகாப்பு பற்றி பேசுகிறோம். அதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். அனைவருக்கும் எல்லாம் தெரிந்திட வேண்டும் . உங்கள் உரிமைகள் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விவரம்.
ஒரு மருத்துவமனையைப் பற்றி நீங்கள் எவ்வாறு அறிந்திருப்பீர்களோ, அதைப் போலவே காவல் நிலையத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ”

நீங்கள் இதைத் தெரிந்து கொண்ட பின்பு, காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் எல்லாவிதமான புகார்களைப்பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவை குற்றத்திற்கு ஏற்ப மாறுபடும். சாதாரண குற்றங்களான சங்கிலி பறிப்பு, வாகனத் தாக்குதல்கள், வீட்டில் நடக்கும் திருட்டு, உடல் ரீதியான தாக்குதல், பாலியல் வண்முறை, கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை அல்லது கொலை செய்வதற்கான முயற்சி ஆகியவை அடங்கும். காவல் அதிகாரிகள் குற்றம் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதைப்பற்றி விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் காவலர்களால் ஒரு FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட வேண்டும்.

கிரிமினல் குற்றங்களில் போலீசார் நீ திமன்றங்களின் தலையிடு இல்லாமல் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது அல்லது குற்றத்தை விசாரிக்கவும் முடியாது. புகார்களை பதிவு செய்வதற்குக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியதில்லை.

விசாரணைகள் முடிந்தபின், புகாரின் நகல் ஒன்று இலவசமாக புகார் அளித்தவருக்கு வழங்கப்படுகிறது. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடும்ப வன்முறைக்கு எதிரான அமைப்பினை அணுகலாம். ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான குறிப்புகளில் ஒன்று, என்ன நடந்தது என்பதினை நீங்கள் விரிவாகக் கொடுக்க வேண்டும். “அரைகுறையான விவரங்களினை கொடுக்கக்கூடாது – நடந்த உண்மைகளை மட்டும் சொல்ல வேண்டும்” என்று திரு. முகர்ஜி கூறுகிறார்.

எனினும், சட்ட ஆர்வலரும் சமூக பணியாளருமான அஸ்வுண்டா பார்டே கூறுகிறார், “சில நேரங்களில் புகாரினை பதிவு செய்யும் போது போலீசார் உண்மையான தகவல்களை பதிவு செய்யாமல் இருப்பது உண்டு.” இவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கு நீங்களே எழுதிய புகாரை எடுத்து செல்லுங்கள். உங்களுடைய நகலினை கையெழுத்திட்டு பெறுவதற்கு முன்பு நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் இருக்கின்றதா என்று சரி பாருங்கள்.

ஒரு காவல் நிலையம் உங்கள் புகாரை மறுக்க முடியாது அல்லது அதிகார வரம்பிற்குள் நீங்கள் வரவில்லை என்று கூறி வேறொருவரிடம் உங்களை அனுப்பி வைக்கவும் முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். “முதல் நிலை அறிக்கை எந்த எண்ணும் இல்லாமல் பதிவு செய்ய இயலும்; மேலும் அது சரியான காவல் நிலையத்திற்கு மாற்றப்படவும் முடியும்.” என்று புனையை சேர்ந்த ஷீலா அடையாந்தா, சிவில், குற்றவியல் மற்றும் குடும்ப விவகாரங்களை கையாளும் வழக்கறிஞர் கூறுகிறார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி புகாரினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அந்த பெண் தன்னுடைய புகாரை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது மேல் அதிகாரியை சந்திக்க வேண்டலாம். ஆன்லைன் புகார்கள் கூட தாக்கல் செய்யலாம். மேலும் நீங்கள் தேசிய மகளிர் ஆணையத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.

“அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பெண்களுக்கு தமது தனிப்பட்ட பிரச்சினைகளை ஆண் அதிகாரிகளுடன் சங்கடத்துடன் விவாதிக்கும் நிலைமையை தவிர்கின்றது. ஆனாலும் இன்றும் பல பெண்கள் தயக்கத்துடன் தான் காவல் நிலையம் வருகின்றனர். பயம் மற்றும் தயக்கம் இல்லாமல் பெண்கள் காவல் நிலையங்களை அணுகும் காலம் கட்டாயம் வரும் என்கிறார் காயத்ரி நாக்பால் (சென்னையில் ஒரு இன்ஸ்பெக்டர்). பெரும்பாலான காவல் நிலையங்கலில் இப்போது ‘மகளிர் பிரிவு” உள்ளது. மேலும் ஒரு பெண் காவல் அதிகாரியிடம் புகார் குறித்து பேசும் போது எந்த ஒரு தயக்கம் இல்லாமல் பேசமுடியும்.

காவல் நிலையத்தில் புகார் செய்யப் போயிருந்த பெண்களை காவல் அதிகாரிகள் தொந்தரவு செய்த சம்பவங்களும் உள்ளன என அசுந்தா கூறுகிறார். அவர் தான் நள்ளிரவில் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட சம்பவம் ஒன்றினை நினைவு கூர்ந்தார். எந்த ஒரு நிலையம் உங்களை புகார் செய்யவிடாமல் தடுக்கமுடியாது. மேலும் புகார் அளிக்கும் போது நீங்கள் தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால், அதை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லுங்கள். திரு.முகர்ஜி கூறுகையில் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை நீங்கள் அழைத்து செல்லலாம். “நீங்கள் யாரையும் அழைத்து செல்லலாம் – ஒரு வக்கீல் தான் அங்கு இருக்க வேண்டும் என்றில்லை ” என்று ஷீலா கூறுகிறார். ஒரு புகாரைச் சமர்ப்பிப்பதற்கு காவல் நிலையத்திற்கு நீங்கள் எந்த நேரமும் செல்லலாம் (சூரியன் மறைந்த பின்பு அல்லது சூரிய உதயத்திற்கு முன்பு பெண்கள் கைது செய்யப்பட முடியாது).

என்றும் மறக்காதீர்கள். மனதில் என்றும் கொள்ளுங்கள். காவல் நிலையத்தில் புகார் அளிக்க சம்பவத்திற்குப் பிறகு சீக்கிரம் செல்லுங்கள். சில நேரங்களில் தாமதமாக செல்வது உங்களுக்கு எதிராகவும் மாறலாம்.

மேலும் நடந்ததைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை என்றும் எண்ண வைக்கலாம். உங்களை யாராவது பின்தொடர்ந்தால் அல்லது அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவியுங்கள். திருமதி. நாக்பால் இந்த கருத்தை பிரதிபலிக்கின்றார். “இளம் பெண்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களிடமிருந்து இது போன்ற சம்பவங்களை மறைக்கின்றனர். இது அவர்களை பின்தொடரும் நபர்களுக்கு தைரியமூட்டுகின்றது. இதன் தொடர்ச்சியாக அமில தாக்குதல்கள் அல்லது பிற உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற விபரீதமான சம்பவங்கள் ஏற்படலாம். திரு. முகர்ஜி சென்னையில் நடந்த சுவாதியின் வழக்கினை உதாரணமாகக் கூறுகிறார்.

நிதி ஷர்மா அவரது கணவர் அவரது கையை உடைத்தபோது காவல் நிலையத்திற்கு புகார் செய்ய சென்றார். முதலில் அவர் மிகவும் சங்கடமாக உணர்ந்தாலும் புகார் அளிப்பது முக்கியம் என்று உணர்ந்தார். “ஒவ்வொரு காவல் நிலையமும் குடும்ப வன்முறை புகாரை முதலில் பதிவு செய்ய வேண்டும். இது நீங்கள் இந்த விவரத்தை சிறியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உங்களை தாக்கியவருக்கு சொல்லுகிறது. இந்த விஷயத்தில் காவல் அதிகாரிகள் மிகவும் உதவியாதாகவும், மீண்டும் அவர் அச்சுறுத்தப்பட்ட போது மீண்டும் அவர்களை அணுகி, அவர்களின் உதவியினை பெற்றார். மேலும் பாதுகாப்பு தேவைப்படும் என்றால் ACP யின் தனிப்பட்ட கைபேசி எண்ணையும் பெற்றார்.
ஒரு புகாரைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு காவல் நிலையத்திற்கு செல்லவது முதலில் கடினமாக இருக்கலாம். எனினும், திரு. முகர்ஜி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். காவல் அதிகாரிகளுக்கு அடிபணியத் தேவையில்லை.. அவர்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள், உங்கள் புகாரில் செயல்பட கடமைப்பட்டவர்கள். ”

*பெயர்கள் வேண்டுகோளின்படி மாற்றப்பட்டது

Melanie Lobo is a freelance writer. She grew up in cities across India but now

மேலும் விவரங்கள்

Rapid Fire With Lisa Ray

கருத்துக்கள்

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! [நாகரிகமாக இருங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம். எங்கள் அடிக்குறிப்பில் நீண்ட கருத்துக் கொள்கைகளை பார்கலாம்!]

எங்கள் வாராந்திர அஞ்சலைப் பெறுங்கள், மேலும் பெண்களைப் பற்றிய சிறந்த வாசிப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்!

Women In Corporate Awards