இந்தியாவில் மருத்துவ உலகினில் திருப்புமுனை ஏற்படுத்திய 10 பெண் மருத்துவர்கள்

மருத்துவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் சேவையினை பாராட்ட ஜூலை முதல் தேதி மருத்துவர்களின் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சிறந்த சில பெண் மருத்துவர்கள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

மருத்துவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் சேவையினை பாராட்ட ஜூலை முதல் தேதி மருத்துவர்களின் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சிறந்த சில பெண் மருத்துவர்கள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

இந்த நாள் சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் அனைத்து டாக்டர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் ஆகும். இந்தியாவில் ஆணாதிக்கத்திற்கு எதிராக செயல்படும் பெண் டாக்டர்கள் பெரிய அளவில் பாராட்டப்படுவது ஏனென்றால் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நிறைய பெண் மருத்துவர்கள் குறைந்த காலத்திலேயே பெண் என்ற காரணத்தினால் தங்களது முயற்சிகளிலிருந்து பின்வாங்கிவிடுகின்றனர்.

(You can also access this article in English: 10 pathbreaking women doctors in India)

டாக்டர் ஆனந்த்பாய் ஜோஷி 1885 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆவார். ஆனால் அவர் 1887 ஆம் ஆண்டு மறைந்தாலும் மருத்துவராக முக்கிய தடம் பதித்தே சென்றார். ஆனாலும் அவரது வாழ்க்கை மற்ற மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

1891 ஆம் ஆண்டில் டாக்டர் ருக்மபாயி ரவுட் என்றவரது முயற்சியினால் பெண்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் வயதினை பத்திலிருந்து பன்னிரண்டாக உயர்த்தினார். அதுவே 18ஆக 2013ஆம் ஆண்டு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மிகச்சிறந்த பெண்கள் மருத்துவர்கள் பற்றியும் நமது நாட்டின் சுகாதாரத் துறையை ஒருங்கிணைப்பதில் அவர்களின் பங்களிப்பு பற்றியும் அறிந்து கொள்வோம்.

டாக்டர் பத்மாவதி ஐயர்

இந்தியாவில் இருதய மருத்துவத்தின் கடவுள் என்று கூறப்படும் டாக்டர் பத்மாவதி சிவராமகிருஷ்ணா ஐயர், இந்த ஆண்டு 101வது வயதை எட்டியுள்ளார். 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியபோது இருந்ததைப் போலவே இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது ஆழ்ந்த அறிவும், உற்சாகமும் இந்தியாவில் இருதய சிகிச்சை முறைகளை சிறப்பாக உருவாக்கிட உதவியது.

முதல் இந்திய பெண் இருதயநோய் நிபுணர் மட்டுமல்ல, அவர் இந்தியாவின் முதல் இருதயவியல் துறையையும் உருவாக்கினார். இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டுவந்திட உதவினார். அவருடைய வழிகாட்டுதலினால், இந்தியாவில் இருதயவியல் துறை பல சிறப்புகளை அடைந்தது.

டாக்டர் மஞ்சுலா அனகனி

இந்தியாவில் அவர் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் மற்றும் மகப்பேறியல் நிபுணர் மட்டுமல்ல குறுகிய துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றவர். பெண்களின் மாதவிலக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு அவர் முக்கியமாக தீர்வுகண்டுள்ளார்.

அவரது ‘சுயோசா-ஒரு பரிபூரண பெண்’ என்ற சுகாதார பிரச்சார இயக்கம் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த நலப்பிரச்னைகள், குழந்தைகள் வன்முறை, மற்றும் பருவ வயதில் உள்ள இளம் பெண்களின் சுகாதார கல்வி ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. பெண்களுடைய நலத்திற்காக பாடுபடும் ‘பிரத்தியுஷ ஆதரவு’ என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தையும் அவர் நிறுவியுள்ளார்

மேலும் மருத்துவ முகாம்களிலும், அனாதை இல்லங்களிலும், பள்ளிகளிலும் இலவச சுகாதார பரிசோதனைகளை டாக்டர் மஞ்சுலா அனகணி நடத்துகிறார். ஆந்திரா மாநில அரசாங்கத்துடன் இணைந்து அங்கு உள்ள கஸ்தூர்பா பாலிகா வித்யாலயாவில் இளம் பெண்களுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கிட உதவியுள்ளார்.

டாக்டர். இந்திரா இந்துஜா

சிறந்த மகளிர் மருத்துவம்; மகப்பேறியல் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணரான டாக்டர். இந்திரா இந்துஜா இந்தியாவில் கேமேட் இன்ராபலோபியன் டிரான்ஸ்பர் மருத்துவ நுட்பத்தினை முதன்முறையாக உபயோகித்து முதல் குழந்தையை ஜனவரி 4ஆம் தேதி 1988ஆம் ஆண்டு பிறக்கச் செய்தார். இது மட்டுமல்ல இவர் இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை ஆகஸ்ட் 6ஆம் தேதி 1986ஆம் ஆண்டு பிறக்கச் செய்தார். இவர் 1991ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கருமுட்டை தானத்தின் மூலம் முதல் குழந்தையைப் பிறக்கச் செய்தார். இந்த நுட்பம் கருப்பை செயலிழந்த மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் ஒரு வரமாக அமைந்தது.

தற்போது இவர் மஹிம் வெஸ்ட், பாம்பேயில் உள்ள பி.டி. ஹிந்துஜா மருத்துவமனையில் மகப்பேறியல் துறையில் முழுநேரப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் மும்பையிலுள்ள பி.டி. ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ மகப்பேறியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.

டாக்டர் ஜெயஸ்ரீ மாண்ட்கர்

இவர் மும்பையிலுள்ள சியோன் மருத்துவமனையில் கைக்குழந்தைகளுக்கான சிறப்பு குழந்தை மருத்துவராக உள்ளார். ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியினை நடத்தும் பெருமையினையும் பெற்றுள்ளார். தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. புpறந்த குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தந்து வெவ்வேறு நோய்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சில குழந்தைகளுக்கு தாய்பால் கிடைப்பதில்லை. இந்தத் தேவையை அறிந்து துவங்கப்பட்ட தாய்பால் வங்கி இன்று பல இடங்களில் இருக்கின்றது. இது கைக்குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க உதவுகிறது.

டாக்டர் சஷி வாத்வா

இந்தியாவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் ஒன்று அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்). ஆகும். டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாஷி வாத்வா ஆவார்.
அதுமட்டுமல்ல அவர் பெயரில் 37 தேசிய ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் 67 சர்வதேச ஆராய்ச்சி வெளியீடுகள் உள்ளன. மேலும் அவர் 13 நூல்கள், தனிக்கட்டுரைகள் மற்றும் 27 அத்தியாயங்கள் ஆகியவற்றின் ஆசிரியராகவும்/துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

உடற்கூறியல் மற்றும் நரம்பியல் ஆகிய துறைகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். முக்கியமாக மனித மூளையின் வளர்ச்சியினைப் பற்றி அவர் அதிகமாக ஆய்வு செய்துள்ளார். சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு கருவின் வளர்ச்சியினை பாதித்து முதுகுத் தண்டு மூளையின் மையப் பகுதி பார்வை நரம்புகள் செல்லும் பாதை மற்றும் சிறுநீரகப்பை ஆகியவற்றில் அசாதரண மாற்றங்களை கொண்டு வருகின்றன என்பதினை கண்டறிந்தார். விலங்குகளைக் கொண்டு அவ்வாறு செய்த பரிசோதனைகள், மேலே கூறிய மண்டலங்களின் மூலக்கூறு வளர்ச்சியில் தொடர்புடைய செயல்முறைகளை நன்கு புரிந்து கொள்ள உதவியது.

உண்மையில் அவரது ஆய்வுகள் எதிர்காலத்தில் இன்னும் பயனுள்ளதாக இருக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.

டாக்டர் அஜீதா சக்ரவர்த்தி

டாக்டர் அஜிதா சக்ரவர்த்தி மனம் சார்ந்த விஷயங்களைக் கையாண்டார். இந்தியாவின் முதல் மகளிர் உளவியலாளர்களில் ஒருவரான இவர் தன்னுடைய பயிற்சியினை இங்கிலாந்தில் முடித்த பின்பு மேற்கு வங்காள சுகாதார சேவைப்பிரிவினில் சேர்ந்தார். பெண்ணாக அவர் பல தடைகளை எதிர்கொண்டபோதும், வேறு இடங்களில் சிறந்த வேலை வாய்ப்புகள் வந்தபோதும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மேற்கு வங்காள சுகாதார சேவையில் செலவழித்தார்.

அவர் இந்திய உளவியலாளர் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றினார். இவர் பொதுச் செயலாளர் (1967-1968), பொருளாளர் (1971-1974), துணைத் தலைவர் (1975) மற்றும் இறுதியாக 1976இல் தலைவராகவும் செயலாற்றினார்.

ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் சார்ந்த காட்சி மாயைகள் பெரும்பாலும் பெண்களிடத்தில் காணப்பட்டதாக அவரது ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கோரோவில் ஏற்பட்ட உளவியல் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இடப்பெயர்ச்சி, விவசாய நில இழப்பு மற்றும் விவசாயம் செய்யும் மக்களிடையே கலாச்சாரம் பற்றிய அச்சுறுத்தல்கள் ஆகியவையே என்று கண்டுபிடித்தார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை அவர்களுக்காக செலவிட்ட அவர் அம்மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஏற்ற உளவியல் ரீதியான சிகிச்சையினை கண்டறிந்தார்.

அவர் 25 ஆண்டுகள் உலக உளவியலாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், கலாச்சாரம் சார்ந்த உளவியல் பிரிவின் உறுப்பினராகவும் செயலாற்றினார். அவர் பெண்கள் மற்றும் மன நல நோயாளிகளுக்கு எதிரான பாரபட்சங்களை அகற்றிட பாடுபட்டார்.

டாக்டர் நீலம் க்லெர்

இவர் பச்சிளம் குழந்தைகளின் தீவிர சிகிச்சை மற்றும் வென்டிலேஷன் சார்ந்த பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றினார். தனது மருத்துவ சேவையை மே 1988 இல் புது தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் தொடங்கினார்.

30 ஆண்டுகால மருத்துவ வாழ்க்கையில், கிளெர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான நியோனாட்டாலஜி துறையைத் தொடங்கினார். தற்போது அப்பிரிவின் தலைவராக இருக்கிறார். இப்பிரிவு குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிர்வாழும் சாத்தியத்தினை 90% ஆக உயர்த்த உதவியது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தொடர் திட்டங்களையும் முயற்சிகளையும் தொடங்கினர்.

டாக்டர் கெதாயுன் அர்தேஷீர் டின்ஷா

இந்தியாவில் நவீன புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் மிகவும் பயனுள்ள கதிர்வீச்சு சிகிச்சை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். “இந்தியாவில் புற்றுநோய்க்கான கடைசி நம்பிக்கை” என்று இவரை ஒரு செய்தி சேனல் வருகின்றது.

முப்பது வருடத்தில், இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளில் ஒரு மாற்றத்தினை கொண்டுவந்தார். மேலும் பல மாதிரி சிகிச்சை முறைகளை முறைப்படுத்தினர்.

அவர் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி வெளியீடுகளை கொண்டு வந்துள்ளார். மேலும் ஏராளமான அறிவியல் வெளியீடுகளின் ஆசிரியர் குழுவிழும் இருந்துள்ளார்.
நவி மும்பையில் உள்ள அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்பாட்டு மையம் (ACTREC), டாடாவின் மெமோரியல் மருத்துவமனை மற்றும் TMHஇல் உள்ள Faculty Block மற்றும் இஃர்ட் Faculty Block) ஆகிய உருவாகிட காரணமானவர். துரதிர்ஷ்டவசமாக, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2011 இல் காலமானார்.

டாக்டர் சுபத்ரா நாயர்

அவர் ஒரு இந்திய மகப்பேறு மருத்துவர், மருத்துவ ஆசிரியர் மற்றும் சமூக சேவகர். பெண்ணோயியல் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு அவரை பத்மஸ்ரீ பெற்ற முதல் மகப்பேறு மருத்துவராக்கியது.

அவருக்கு பல்வேறு துறைகளில் தனது தலைமைத்துவ திறன்களை ஆராய ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. உதவி அறுவை சிகிச்சை நிபுணர், ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் மற்றும் ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, ​​திருவனந்தபுரத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் மருத்துவமனையின் மகளிர் மருத்துவத் துறையின் தலைவராக உள்ளார். ஆதரவற்றோர் சேவையில் ஈடுபட்டுள்ள அபயா என்ற தொண்டு நிறுவனத்துடனும் அவர் பணியாற்றுகிறார். முதியோர்களுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான இல்லங்கள், பள்ளிகள் மற்றும் பொது சமையலறை ஆகியவற்றை நிறுவி பலருக்கும் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளார்.

டாக்டர் கஸ்தூரி ராஜாத்யக்ஷா

அவர் ஒரு மகளிர் மருத்துவ நிபுணராக பணிபுரிந்தார், மேலும் தனது முழு வாழ்க்கையையும் பெண்களின் நலனுக்காக அர்ப்பணிப்பதில் இருந்து விலகிச் செல்லவில்லை. பெண்கள் மத்தியில் குடும்பத்தினில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதும் துன்பத்திலிருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி செய்வதும்தான் அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.

பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்திய துணைக் கண்டத்தின் பெண்கள் ஆதரவு அமைப்பை உருவாக்கிட ஊக்குவித்தது.

தெற்காசிய சமூகத்தில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்ட ‘ஆஷா-நம்பிக்கையின் கதிர்’ என்ற முறைசாரா அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். பெண்களின் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றது. மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட ஒருவரை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

இந்தியாவில் பெண்கள் டாக்டர்கள் தங்களது மருத்துவ ஆலோசனைகள், கருத்துக்கள், மற்றும் கடின உழைப்பால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர்.
அர்ப்பணிப்பு, தனிப்பட்ட கவனிப்பு மற்றும் முயற்சிகள் மூலம் உயிர்களைக் காப்பாற்றவும், உலகெங்கிலும் உள்ள நோயாளிகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் உதவிய அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு வணக்கம்!

About the Author

1 Posts | 3,826 Views
All Categories