இந்தியாவின் நீதீத்துறையில் சூப்பர் ஹீரோக்களாக திகழும் 8 பெண் வழக்கறிஞர்கள்

இந்த பெண் வழக்கறிஞர்கள் நீதி என்ற மந்திரக்கோலினைக் கொண்டு நீதிக்காகப் போராடி வருகின்றனர். மற்ற பெண்களுக்கு அவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த பெண் வழக்கறிஞர்கள் நீதி என்ற மந்திரக்கோலினைக் கொண்டு நீதிக்காகப் போராடி வருகின்றனர். மற்ற பெண்களுக்கு அவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவின் தலைமை நீதிபதி, “நான் யாராக இருக்கின்றைனோ அவ்வாறு என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 377 ஐ எதிர்த்து கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பில் கூறியுள்ளார். 157 ஆண்டுகால பழமையான இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் அருந்ததி கட்ஜு மற்றும் மேனகா குருசாமி ஆகிய இரு பொது நலன் சார்ந்த வழக்குரைஞர்களால் நீண்டகாலமாக நடத்தப்பட்டுவருகிறது.

இந்த இரண்டு இந்திய வழக்கறிஞர்களும் டைம் பத்திரிகையின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த இரண்டு பெண்களும் மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றனர். இவர்களை போன்று நீதித்துறையில் சாதிக்கும் 8 பெண் வக்கீல்களைப்பற்றி பார்ப்போம்.

1. மேனகா குருசாமி

மேனகா குருசாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் சார்ந்த வழக்குகளை கையாளுகின்றார். சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளை தங்கள் பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என்று வரைமுறை செய்து கட்டளையிட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் இந்த விதியைப் பாதுகாப்பதில் அவர் பெரும் பங்கை வகித்தார்.

இதைத் தவிர, மணிப்பூரில் நடந்த கூடுதல் நீதித்துறை சார்ந்த கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர் போராடினார். பிரிவு 377 க்கு எதிரான போராட்டத்திலும் அவரது பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ எதிர்த்து போராடிய நாஸ் அறக்கட்டளையின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்களில் ஒருவராக அவர் இருந்தார்.

நீதியை நிலைநிறுத்துவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். “தங்கள் வாழ்வின் நிலைமையினை சொல்ல முடியாதவர்களுக்காக வாதாடுகின்றேன், சுதந்திரமாக இல்லாமல் ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பது, ஒரு தேசத்தின் மக்களை நான் யார், நான் எதற்காக உருவாக்கப்பட்டேன்? என்றுக் கேட்டுக்கொள்ளத் தூண்டுவது”. இதுவே என்னுடைய வேலை.

2. அருந்ததி கட்ஜு

அருந்ததி கட்ஜு ஒரு முக்கியமான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடுவது, மற்றும் ஜெசிகா லால் கொலை வழக்கு உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க வழக்குகளை அவர் வழிநடத்தினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நீதிக்காக போராடுவதிலும் அவர் ஈடுபட்டார். பிரிவு 377 க்கு எதிராக போராடி வருவதில் அவர் முக்கியமான பங்குவகிக்கிறார்.

இந்த பழமையான சட்டத்திற்கு எதிராக போராடுவதில் கட்ஜூ முக்கிய பங்கு வகித்தார். “இந்த சட்டம் விக்டோரியன் கால ஒழுக்கத்தின் வெளிப்பாடாக இருந்தது, ஆனால் அது பழமைவாத இந்திய சமூக வெளிப்பாடாக புரிந்து கொள்ளப்பட்டது. இது உங்கள் ஆசைகளை மூடிமறைக்கும் குற்றவியல் சட்டமாகும்.”

3. கருணா நுண்டி

கருணா நுண்டி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக உள்ளார். அவர் மனித உரிமை சார்ந்த வழக்குகள் அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஊடக சட்டம் சார்ந்த வழக்குகளை கையாளுகிறார். இந்தியாவில் பாலின சமத்துவ இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளார். கருணா நுண்டி 1984 போபால் எரிவாயு பலியானவர்களுக்கு நீதி கோரி போராடியுள்ளார்.

ஆன்லைனில் தடையில்லாமல் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள இடைவிடாமல் போராடியுள்ளார். பெண்களின் தற்போதைய நிலை பற்றிய அறிக்கையினை வெளிகொண்டுவருவதிலும், டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கற்பழிப்பு எதிர்ப்பு மசோதாவை வடிவமைப்பதிலும் அவருடைய பங்கு முக்கியமானது.

“எப்படி பெண்களை பின்தொடர்ந்து செல்லக்கூடாது, கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி, எவ்வாறு திருமணதிற்கு தயாராக வேண்டும் என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுங்கள். ஏன் எப்போதும் பொறுப்பினை பெண்கள் மீதே வைக்க வேண்டும்?” என்று அவர் கேட்பது நியாயம் தானே?

4. ஸ்ரேயா சிங்கால்

ஸ்ரேயா சிங்கால் ஒரு இந்திய வழக்கறிஞர். பேச்சு சுதந்திரத்திற்கு தடையை ஏற்படுத்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66Aவை அகற்றிட வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அனைத்து பணி நிறுத்தத்திற்கு எதிராக கருத்தை வெளியிட்டதால் மகாராஷ்டிராவில் இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பிரிவு 66 (A) க்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

5. சுதா பரத்வாஜ்

சுதா பரத்வாஜ் ஒரு முக்கிய தொழிற்சங்கவாதி மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவுடன் இருந்த தொடர்பினால், பிலாயில் உள்ள சுரங்கங்கள் மற்றும் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க மறுத்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக அவர் போராடினார். மேலும் தலித் மற்றும் பழங்குடி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிலும் ஈடுபட்டார். மேலும் நிலத்திற்கான உரிமை, கல்விக்கான உரிமை, சுகாதாரம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் நில உரிமையாளர்களுக்கு எதிராகவும் பாடுபட்டார்.

2016 ஆம் ஆண்டு முதல் கட்பர்ரா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள அருகிலுள்ள கிராமங்களின் வாழும் மக்களுக்கான சட்டப் போரில் ஈடுபட்டு வருகிறார். ஆகஸ்ட் 28 அன்று மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கிராமத்தில், சாதி வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் சுதா பரத்வாஜ் மற்றும் ஒன்பது மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். ‘நகர்ப்புற நக்சலைட்டுகள்’மற்றும் ‘அடிக்கடி போராட்டங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்துப்பவர்கள்’ என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். சுதா பரத்வாஜ் தனது வாழ்க்கைப் பயணம் குறித்து கூறுகையில்: “நான் பணம் சம்பாதிக்கவில்லை, ஆனால் மக்களை சம்பாதித்தேன்”

6. விருந்தா குரோவர்

விருந்தா குரோவர் 2013 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக டைம் இதழால் அங்கீகரிக்கப்பட்டவர். அவர் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார். க்ரோவர் சோனி சோரி கற்பழிப்பு-சித்திரவதை வழக்கு மற்றும் 1984 சீக்கிய எதிர்ப்பு கலவர வழக்கு ஆகியவற்றில் நீதிக்காக போராடினார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான 2013 குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012, மற்றும் சித்திரவதை தடுப்பு மசோதா, 2010, ஆகியவற்றின் வரைவிலும், வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் ஒரு சட்டத்தின் வரைவிலும் முக்கிய பங்கினை அளித்துள்ளார்.

7. இந்திரா ஜெய்சிங்

இந்திய உச்சநீதிமன்றத்தில் சிறந்த வக்கீல்களில் ஒருவர் இந்திரா ஜெய்சிங். மனித உரிமைக்காக சட்டப்பூர்வமாக செயல்பட்டதால் அவர் அறியப்படுகிறார். பார்ச்சூன் பத்திரிகையினால் உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் இந்திரா ஜெய்சிங் 20 வது இடத்தைப் பிடித்தார்.

பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான பல வழக்குகளில் அவர் எதிர்த்துப் போராடியுள்ளார். அவற்றில் முக்கியமான ஒன்று மேரி ராயின் வழக்கு. இது கேரளாவில் உள்ள சிரிய கிறிஸ்தவ பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை வழங்கிட வழி செய்தது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு, முஸ்லீம் தனிநபர் சட்டம், குழந்தைத் தொழிலாளர், வீட்டு வன்முறை வழக்குகள் பலவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார். உள்நாட்டு வன்முறைச் சட்டத்தை (2005) வடிவமைப்பதில் அவரது பணி முக்கியமானது.

அவரது மிக சமீபத்திய பாராட்டுகளில் ஒன்று பிரியா பிள்ளை வழக்கில் அவர் பெற்ற வெற்றி. இவ்வழக்கின் தீர்ப்பில் மாநிலஅரசு எதிர்ப்பை காட்ட முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஜெய்சிங் ஆவார்.

8. ஃபிளேவியா ஆக்னஸ்

ஃபிளேவியா ஆக்னஸ் ஒரு சட்ட அறிஞர், பெண்களின் உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். பெண்களுக்கு சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை வழங்க போராடும் ‘மஜ்லிஸ்’ என்ற அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். சிறுபான்மை மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

1979 ஆம் ஆண்டில் உள்நாட்டு வன்முறை, வரதட்சணை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாள உருவான பெண்களை ஒடுக்குவதற்கு எதிரான மன்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். குடும்ப வன்முறையில் அவர் பெற்ற சொந்த அனுபவம் பெண்களின் உரிமைகளுக்காக உழைப்பதற்கு தேவையான புத்துணர்ச்சியினை அவருக்கு தந்தது. இந்த பெண் வக்கீல்கள் உண்மையில் நீதியின் வீரர்கள். பல பெண்களுக்கு எது சரி எது தவறு என்று போராட அதிகாரம் அளிக்கும், கல்வி கற்பிக்கும், ஊக்குவிக்கும் சக்திகள் அவை.

About the Author

Nishtha Pandey

I read, I write, I dream and search for the silver lining in my life. Being a student of mass communication with literature and political science I love writing about things that bother me. Follow read more...

2 Posts | 4,504 Views
All Categories