கேரட் பச்சடியும் (கேரட் சட்னி) மாமியாருடன் பிணைப்பும்: ஒரு வித்தியாசமான கேரட் சட்னி

Posted: June 30, 2019

இரண்டு பெண்களுக்கிடையே நெருங்கிய பிணைப்பு உருவான கதை. எளிய உணவிற்கும் ருசி சேர்க்கும் இந்த சட்னியினை செய்து பாருங்கள்.

எனது மாமியாரின் சமையல் பற்றிய முதல் நினைவு கேரட் சட்னியைப் பற்றியது. அதை சாப்பிட்ட நாள் முதல் கேரட் சட்னியுடன் மட்டுமல்ல என்னுடைய மாமியாருடனும் எனக்கு நெருங்கிய பிணைப்பு உண்டானது. வித்தியாசமான சுவையுடன் அமைந்த இந்த உணவினை ருசித்து சாப்பிட்ட பின்பு தான் அறிந்து கொண்டேன் அது வெறும் ‘கேரட் சட்னி’ தானென்று. என்னுடைய அம்மா கேரட் மற்றும் தேங்காய் சேர்த்த பொரியல், அல்லது கேரட்டுடன் பாலும் சர்க்கரையும் சேர்த்த அல்வா மட்டுமே செய்துள்ளார்.

எனது மாமியார் இன்றும் எளிமையான உணவு வகைகளை தன்னுடைய அன்பையும் சேர்த்து செய்து வந்தாலும், அவரது வித்தியாசமான ருசியுடன் அமைந்த சட்னிகளும் ஊறுகாய்களும் இன்றும் பிரபலமானவையாக உள்ளன. தெவிட்டாத சுவையுடன் அமைந்த கேரட் சட்னி ஆத்ம உணவு என்று சொன்னால் மிகையாகாது. என்னுடைய மாமியாரிடம் நான் பார்த்த மற்றுமொரு சிறப்பான குணம் – அவர் முன்பின் அறியாதவர்களிடமும் நீண்ட நேரம் உரையாடுவார். மேலும் அவர் கதைகள் சொல்வதற்கும் என்றுமே தயங்கியதில்லை.

அவருடைய நீண்ட வாழ்க்கை அனுபவங்கள்,; ஆறு குழந்தைகளை வளர்த்த அனுபவங்கள், வீடு மற்றும் சமையலறை அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் போது அவர் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் – கடுப்பு கைலாசம், இல்லு வைகுந்தம் என்பவையே. இதன் அர்த்தம் நம்முடைய வயிறு கைலாசத்தைப் (சிவன் இருக்கும் இடம்) போன்றது, நம்முடைய வீடு வைகுந்தம் (கிருஷ்ணர் இருக்கம் இ;டம்) போன்றது. பல புண்ணிய தலங்களுக்கு சென்று வந்திட அவருக்கு விருப்பமிருந்தாலும் அவருக்கு இருந்த குடும்ப பொறுப்புகளாலும், முதுமையினாலும் அவரால் அங்கெல்லாம் சென்று வர இயலவில்லை. தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திராவில் சட்னி செய்வதற்கு புளியைத் தான் உபயோகித்து வந்தனர். ஆனால் இந்த கேரட் சட்னியில் எலுமிச்சை சாற்றினை உபயோகித்து அந்த மாறுபட்ட சுவையினைக் கொண்டு வந்தார். மிளகாயின் காரம், வெந்தயத்தின் கசப்பு சுவை, மற்றும் மிதமான இனிப்பு சுவையுடைய கேரட் ஆகியவை சேர்த்து செய்த இந்த சட்னியின் சுவை புளிப்பு சுவையுடைய எலுமிச்சை சாற்றினால் மேலும் சுவையினை அதிகமாக்கியது.

கேரட் சட்னி செய்முறை

தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்கள்: 4 நபர்கள்

தேவையான பொருட்கள்

3 நடுத்தர அளவு கேரட்
2 தேக்கரண்டி வெந்தயம்
1 தேக்கரண்டி கடுகு
5-6 சிவப்பு மிளகாய்
¼ தேக்கரண்டி பெருங்காயம்
¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1-2 எலுமிச்சை
1 தேக்கரண்டி எண்ணை
1 கரண்டி எண்ணை சுவைக்கு ஏற்ப உப்பு

சட்னி தயாரிக்கும் முறை

ஈரமில்லாமல் வெந்தயம், கடுகு மற்றும் சிவப்பு மிளகாய் வற்றல்களை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு அவற்றை தனியாக ஆற வைக்கவும். ஒரு சுடான வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணைய் சேர்த்து நறுக்கி வைத்த கேரட் துண்டுகளை; வதக்கி எடுக்கவும். அதிகமாக வேகவிட வேண்டாம். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி வைக்கவும். சிறிது நேரம் ஆறவைக்கவும்.

பிறகு கேரட் மற்றும் தனியாக வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். பிறகு இதனை பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும். இதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றினை கலக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை பழச்சாற்றினை கலந்து கொள்ளவும். சுடான சாதத்துடன் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து இந்த சட்னியினை சாப்பிடவும். குறிப்பு: இந்த சட்னி ரொட்டியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

புத்தகத்தின் பகுதி, Chutneys: Adding Spice To Your Life வழங்கியவர் அபர்ணா முடிகந்தி பரினம்

Cooking is devotion - this is my mantra! I am a pharmacist by profession and live

மேலும் விவரங்கள்

Rapid Fire With Lisa Ray

கருத்துக்கள்

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! [நாகரிகமாக இருங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம். எங்கள் அடிக்குறிப்பில் நீண்ட கருத்துக் கொள்கைகளை பார்கலாம்!]

எங்கள் வாராந்திர அஞ்சலைப் பெறுங்கள், மேலும் பெண்களைப் பற்றிய சிறந்த வாசிப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்!

Women In Corporate Awards