‘நான் இந்த உலகில் பிறந்த நாள்… என் தம்பி பிறந்த நாள் போல் வேறு எந்த கொண்டாட்டமும் நடந்தது இல்லை…’

‘ஒரு பெண்ணின் சுயமொழி’ என்ற கவிதையில் ஆசிரியர் அவரது ஆணாதிக்கம் கொண்ட வாழ்க்கையை ஒரு சுயமொழியாக தனது பார்வையை எடுத்துக் கூறியுள்ளார்.

‘ஒரு பெண்ணின் சுயமொழி’ என்ற கவிதையில் ஆசிரியர் அவரது ஆணாதிக்கம் கொண்ட வாழ்க்கையை ஒரு சுயமொழியாக தனது பார்வையை எடுத்துக் கூறியுள்ளார்.

Original in English

‘நான் என் தந்தையின் மகளாக வளர்ந்தேன். மிகவும் சுலபமாக, என் பெயருக்கு பின்னல் அவர் பெயரை சேர்த்துக்கொள்ளப்பட்டது. என் அம்மாவின் உழைப்புக்கு என் தந்தைக்கு ஏன் உரிமை வழங்கப்பட்டது?’ போன்ற உணர்ச்சிகரமான வரிகள் உள்ளன.

தாரம் வார்த்து கொடுத்த பிறகு நான் என் கணவனின் மனைவியாகப் போகிறேன். என் பெயர் தான் மாற்றப்படும். நான்தான் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லப்போகிறேன்’ என்று இருக்கும் வரிகளுடைய முழுக் கவிதையையும் கீழே படியுங்கள்…

ஒரு பெண்ணின் சுயமொழி 

நான் பிறந்த நாளிலிருந்து ஆரம்பித்தது

அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்

ஆனால் என் தம்பி பிறந்தபொது இருந்த கொண்டாட்டம் இல்லை

நான் என் தந்தையின் மகளாக வளர்ந்தேன்

மிகவும் சுலபமாக, அவருடைய குடும்பப்பெயர் எனக்கு வழங்கப்பட்டது

இப்போது, ​​​​எனக்கு 18 வயதாக இருக்கும்போது, ​​நான் ஆச்சரியப்படுகிறேன்

அதன் பின்னால் உள்ள காரணத்தை எண்ணி நான் ஆச்சரியப்படுகிறேன்

என் தாயின் உழைப்புக்கு என் தந்தைக்கு ஏன் உரிமை வழங்கப்பட்டது?

ஏன் ஒவ்வொரு ஆவணத்திலும் தந்தையின் பெயர் கட்டாயமக உள்ளது

அப்போது, ​​எனக்கு திடீரென புரிந்தது 

எனது அடிப்படை அடையாளம் என் வாழ்க்கையில் உள்ள ஆண்களைச் சார்ந்தது என்று 

நான் என் தந்தையின் மகள்

மேலும் என்னை தாரை வார்த்து கொடுத்த பிறகு  

நான் என் கணவருக்கு மனைவியாகப் போகிறேன்

பெயர்களை மாற்றிக்கொள்வதும் நான்தான்

நான்தான் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லப்போகிறேன் 

நான் என் கணவருடன் தனியாக வாழ விரும்பினால்

நான் குடும்பத்தை பிரிப்பவளாக இருப்பேன்

எனக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது

ஆனால் நான் அதை விட்டுவிடுவேன் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திருமணத்திற்குப் பிறகு நான் வேலை செய்யலாம் 

அதற்கு என் புகுந்த வீட்டார் ஒப்புதல் கொடுத்தால்  

ஒரு பெண்ணாக நான் தியாகம் செய்வது இயல்பு

கணவர் உடலுறவு கொள்ள விரும்பினால், நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திருமணம் என்பது கற்பழிப்பதற்கான உரிமமா?

ஒருவேளை அதனால்தான் திருமண பலாத்காரம் குற்றமாக்கப்படவில்லையோ 

நான் குறைவாகப் பெறப் பழகிவிட்டேன்,

ஏன்னென்றால் சில தருணங்களில் கொடுக்கப்படும் சம உரிமை என்னை அழ வைக்கிறது

நான்தான் பலாத்காரம் செய்யப்பட்டவள், ஆனாலும் நான் கட்டுப்படுத்தபடுகிறேன் 

நான் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளேன், எனது தனியுரிமை மீறப்பட்டுள்ளது

‘எல்லா ஆண்களும் இல்லை’ என்று கூட்டாகப் பதில் சொல்கிறார்கள் மக்கள் 

உங்கள் பார்வையை மாற்றுவதற்கான சிறந்த நேரம் இது

அது சங்கடமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும்

அதிகமாக உங்களிடம் இருந்த இடத்தில இப்பொழுது குறைவாக இருக்க நேரிடும் 

ஆனால் இது என்னைப் பற்றியது மட்டும் அல்ல,

உங்களுக்கே தெரியும், சமத்துவம் பரஸ்பரம் என்று!

பட ஆதாரம்: நில் பேட்டே சன்னட்டாவிலிருந்து ஒரு காட்சி 

About the Author

Nidhi Bajaj

A Law student, content writer, sometimes poet, and an all time reader trying to find solace in literature. read more...

1 Posts | 1,098 Views
All Categories