வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்?

'மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?' என்று நிழலை நிஜமாக்குகிறார், நம் வாசகி ரம்யா.

மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?’ என்று நிழலில் நிஜம் சேர்த்து மரங்களின் குரலுக்கு உரு சேர்க்கிறார், நம் வாசகி ரம்யா.

இரு இலைகள் விரிகையில்
இவ்வுலகை நான் காண்கையில்
“துளிர் விட்டாயா செல்லமே” என்று
அணைத்த என் அன்னையின்
அன்பு முகம் கண்டேனே

தேவைக்கேற்ப தண்ணீர் தந்தவள்
கரங்களை கறையாக்கி உரம் சேர்ந்தவள்
பூச்சிகள் அண்டாது பாதுகாத்தவள்
நரைக்கேசமோ, முகச்சுருக்கமோ,
தளர்நடையோ, தனித்திருக்கும் அவள் வாழ்வில்
தடையாக இருந்ததில்லை

சுற்றிலும் என் உறவுகள்
சுதந்திரமாக வளர்கிறோம்
நாட்களும் வருடங்களாக நகர
நாங்களும் வேரூன்றி நின்றோம்

அதோ அந்நாள்!

அந்நியர்கள் பலர், ஆயுதத்துடன்
அவர்கள் மொழி புரியவில்லை
அவளின் அழுகை நிற்கவில்லை
வதைபட்டோம்
வெட்டப்பட்டோம்

தவறென்ன செய்தேன், மானிடா?
மாசில்லா காற்றை தந்தேன்
மழை பொழிய உதவினேன்
பறவைகள் தங்க மகிழ்ந்தேன்
பரந்த நிழல் குடை ஆனேன்

என்றாலும் கலங்காதே தாயே!

அய்யா அப்துல் கலாமின் கனவாக
உமது கண்ணீரின் விதையாக
மீண்டு(ம்) எழுவேன்
எம்மை வெட்டினாலும் மீண்டு(ம்) வருவேன்
மனிதா . . . உன்னை காத்திடவே!

ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது. நம்மால் இயன்ற வழிகளில் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருவோம்.

பட ஆதாரம்: Photo by Harry Cunningham @harry.digital from Pexels

About the Author

13 Posts | 16,111 Views
All Categories