இனியவளே, வெளிச்சம் நீ!

பெண் தன் உள்ளத்தையும் உடலையும் நலமுடன் காத்தால் அவள் ஆயிரம் உயிருக்கு வெளிச்சம் ஆகலாம் என்கிறார், Dr. தென்றல் கோவிந்தராஜன்!

பெண் தன் உள்ளத்தையும் உடலையும் நலமுடன் காத்தால் அவள் “ஆயிரம் உயிருக்கு வெளிச்சம் ஆகலாம்” என்று எழுச்சியூட்டுகிறார், நம் வாசகி Dr. தென்றல் கோவிந்தராஜன்!

இனியவளே
உன் உள்ளத்திலே உறைவிடம் கொள்!
யார் மறுத்திடினும் எழுச்சி கொள்!
இல்லத்தை மணக்காதே
அடுப்படியில் அடங்காதே

உன் வாழ்வில்
உன் அங்கீகாரம்
உன் இயல்பு
அதை அடுத்தவரிடம்
அடகு வைக்காதே!

எப்போதும்
உள்ளமே உறைவிடம்!
அதில் தினம் ஞான ஒளி
ஏற்றிக்கொண்டே இரு!
அடுத்தது உடல்
அதைப்பேணி காப்பாய் நீ!

உன்தன் வெளிச்சம் உறவுக்கு
பரவும் நிச்சயமாய்!
மெழுகாய் நீ உருகி
உறவுக்கு
உயிர் அளிக்காதே!
ஊதி அணைத்து
உன்னை மறக்கும்!

உன் உள்ளம்
உன் ஒளி
உன் வசம் இருந்தால்
ஆயிரம் உயிருக்கு
நீ வெளிச்சம் ஆகலாம்!

About the Author

3 Posts | 2,953 Views
All Categories